ஆசைத்தம்பி ஜவுளிக்கடை மூன்று கலர் சுவரொட்டி விளம்பரங்களும் தடபுடலாக காட்சியளித்தன. தீபாவளி வந்துவிட்டது, நெருங்கிட்ட என் பதை அறிவிக்க ‘படார் படார்” என்ற சப்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. பட்டாடைகளும் பட்டாசும் தானே தீபாவளியின் முக்கிய அம்சம்! பணக்காரர் களுக்கும் புது மாப்பிள்ளைகளுக்கும் தீபாவளி என்றால் கொண்டாட்டம்தானே. ஆனால் ஏழை மக்கள் ? பாவம்! தன் மனைவி மக்களைத் திருப்திப் படுத்த கடன்பட்டாவது புத்தாடையும் பட்டாடையும் வாங்கு கிறார்கள். நாடார் குடும்பம் மட்டும் இதற்கு விதிவிலக்கா? நாளை காலை தீபாவளி. மாணவர்களுக்கெல்லாம் விடு முறை நடராஜனைத் தவிர பாக்கி மூன்று பேரும் பட் டாசும், புது உடையும் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றனர். காலை எட்டு மணிக்கு விருதுநகருக்குப் புறப்பட இருந்த தன் கணவனிடம் மத்தியான சாப்பாட்டைக் கையிலே கொடுத்து 'நாளை தீபாவளி, பையன்களுக்கு துணியும், பட்டாசுக்கட்டுகளும் எப்படியாவது வரும் போது வாங்கி வாருங்கள்' என்று கூறினாள். 'எப்படி யாவது. என்ற வார்த்தைக்கு கடன் வாங்கியாவது என்றுதான் அர்த்தம் என்பதைப் புரிந்துகொண்ட நாடார் 'சரி' யென்று தலையசைத்தார். போய்விட்டு பொழுது சாய்வதற்குள் திரும்பி விடுங்கள், அதிகாலையில் எண்ணை ஸ்நானம் செய்யவேண்டும்" என்று பரிவுடன் கூறி வைத்தாள் வள்ளியம்மாள். 86 RO 5
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/6
Appearance