6 தந்தையின் ஆணை ஆ அப்பாவின் வரவையே குழந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். புது உடை தரிக்கும்போது வரும் பூரிப்பும், பட்டாசைக் கொளுத்தும் பரமானந்தமும் அவர்களின் கற்பனை கண் முன் வந்து வந்து சென்றது, மத்தியான சாப்பாடுகூட அவர்கள் சரியாக சாப்பிடவில்லை. அப்பா வரும் வழியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 4 விருதுநகர் சென்ற நாடார் தன் எஜமானிடத்தில் கெஞ்சிக் கதறி இருபது ரூபாய் முன் பணம் பெற்றார். ஐந்து மணிக்கெல்லாம் வேலையை முடித்துவிட்டு ரெடி மேடு' துணிக் கடைக்குள் நுழைந்து நபருக்கு ஒன்றாக வாங்கி சைக்கிளின் பின்புறம் கட்டினார். அடுத்தபடியாகப் பட்டாசுக் கடைக்குச் சென்று தினுசுக்கு ஒன்று இரண்டு வாங்கி சைக்கிளின் முன்புறம் கட்டினார். மணி ஆறுக்கு மேலாகிவிட்டது. சைக்கிளில் வேகமாகப் புறப்பட்டார். காட்டுப்பாதை வழியாக சைக்கிள் கடும் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பாலைவனம் இன்னும் ஒரு பர்லாங் தூரத்தில்தான் இருந்தது. இடையே ஒரு ஆலமரச்சோலை. அதைக் கடந்து வந்துகொண்டிருந்தார். . 'தடார்' என்ற சப்தம் கேட்டது. அடுத்த வினாடி நாடார் கீழே உருண்டார். ஒரு கல்லில் மோதிய சைக்கிள் அவர் பக்கத்திலே விழுந்தது. 'டபார் டபார்' என்ற சப்தம் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தது. சைக்கிளில் கட்டப்பட்டிருந்த 'பட்டாசு ' ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்க ஆரம்பித்தன. நாடார் பட்டாஸ் கட்டுகளின் பக்கத்திலேயே கிடந்தார். அவர் ஆடையிலும் தீப்பிடித் தது. ஐயோ! அப்பா! என்று நாடார் அலறினார். தீ நன்றாக பிடித்து எரிய ஆரம்பித்தது. நாடார் சுருண்டு
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/7
Appearance