70 தந்தையின் ஆணை பார்வதியும், வள்ளியம்மாளும் ஆளுக்கொரு பக்க மாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர், அப்போது தான் பள்ளிக்குச் சென்றிருந்த மாணிக்கம் வந்தான். அம் மாவும், அண்ணியும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, 'ஏம்மா. அழறே?' பரிதாபமான குரலில் மாணிக்கத்தின் கேள்வி ! பதில் சொல்ல முடியாமல் வள்ளியம்மாளின் தொண்டையை அழுகை அடைத்தது: குமாரின் சாமான்களை தூக்கிச் செல்ல அப்போதுதான் கூலி ஆட்களும் வந்தார்கள். அம்மா சாமான்களை எல்லாம் எங்கே தூக்கிச் i செல்கிறார்கள்?' மாணிக்கத்தின் மறுகேள்வியைக் கேட்ட வள்ளியம் மாள் மெளனமாக இருக்கவில்லை.
- உன் அண்ணன் குமார் தனி வீடு போகிறான்'
என்ன ?...... என் அண்ணா போய் விட்டாரா? தை ஏன் வந்த உடனே சொல்லவில்லை ? ... அண்ணா ! அண்ணா! என்று கதறிக்கொண்டே மாணிக்கம் வெளியே ஓடி னான்; அப்போதுதான் வெளியே இறக்கிவைக்கப்பட்ட சாமான்களை, உள்ளே இருந்த லட்சுமியிடம் தூக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
- 4
அண்ணா!...அண்ணா!" இந்தக் கதறலைக்கேட்டு குமார் திடுக்கிட்டு திரும்பி னான். தன் தம்பி மாணிக்ம் வருவதைக்கண்டான். "என்ன தம்பி!"