உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 69 மேல் பெரிய இடி இத்தனையும் நடராஜனை ஊமையாக் கியது. ஆனால் - பெற்ற மனம் சும்மா இருக்குமா? வள்ளி யம்மாள்ஓடோடி வந்தாள். குமார்! போகாதே! என்னைத் தனியாக விட்டுப் போகாதே! தாயின் வேண்டுகோளைத் தட்டாதவன்தான்- குமார் 1 ஆனால் - தன்மானம், சுயமரியாதை ஆகிய இரண்டும் இல்லாத இடத்திலே இருப்பதை விட இறப் பதுமேல் என்று கருதினான் குமார் ! வீட்டை விட்டு வீதிக்கு வந்துவிட்டான் குமார்! அப்போதும் பார்வதி விட் டாளா? பின் தொடர்ந்தாள்; குமாருக்கு முன்னே போய் நின்று அவனைப் போகவொட்டாமல் தடுத்து நிறுத்தினாள். 'எடுத்த பணத்தை கீழே வைத்துவிட்டுப்போ !" இப்படி நடுரோட்டிலே நின்றுகொண்டு சண்டித் தனம் செய்தாள். பிார்வதி! எதற்கும் ஒரு எல்லை உண் டல்லவா? நடராஜனால் பொருக்க முடியவில்லை. வீதியை நோக்கி வேகமாக வந்தான். "என் தம்பியை மறித்துப் பணம் கேட்க உனக் கென்னடி உரிமை? இப்படி கூறியபடி பார்வதி கன்னத்திலே ஓங்கி அறைந்தான் நடராஜன். அந்த அடி, குமாரின் அவமா னத்தை போக்கும் மருந்தாகிவிடுமா? வழிமறித்து நின்ற மதினி, விலகிவிட்டார்கள் என்று கருதி வீதியோடு விரைந்து சென்றான் குமார் குடும்பத்தோடு ! ஆனால் -- அடிபட்ட பார்வதி அழுது கொண்டே விட்டுக்குள் சென்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/70&oldid=1741032" இலிருந்து மீள்விக்கப்பட்டது