உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தந்தையின் ஆணை இதைக்கேட்ட நடராஜனுக்கு கோபம் வந்தது. முகம் சிவந்தது. ..

  • பார்வதி! பேசாமல் போ !

64 "" முடியாது! களவுபோன பணம் கிடைத்தபின் தான் சாப்பிடவேண்டும்!" .4 திருட்டுப்போன பணம் எப்படியடி வரும்?" எடுத்தவர்கள் கொடுக்கவேண்டும்! யார் எடுத்தது என்று தெரியுமா? 1 தெரியாமல் என்ன ! உங்ககிட்ட பணம் கேட்ட உங்க தம்பிதான் எடுத்திருக்கணும்." பார்வதியின் இந்த பதிலைக் கேட்டதும் குமார் அதிர்ச்சியடைந்தான். தேள் கொட்டியவனைப்போல் துடித்து எழுந்தான்; அவன் முகத்தில் வியர்வை வழிந் தோடியது. அண்ணா! இனி நான் இந்த வீட்டில் இருக்க பிரியப்படவில்லை. இப்போதே வேறு வீடு போகிறேன்.' என்று சொல்லிக்கொண்டே குமார் கையைக் கழு வினான்; தன் குழந்தை தேவராஜனை கையில் தூக்கினான்; தன் மனைவி லட்சுமியை ஏறிட்டுப்பார்த்தான்; சோக உருவெடுத்து நின்று கொண்டிருந்தாள்! "லட்சுமி !... புறப்படு " குமார், குழந்தை தேவராஜன், லட்சுமி ஆகிய மூவரும் வீதியை நோக்கி நடந்தனர். இதைக்கண்ட நடராஜன் மின்சாரத்தால் தாக்குண்டவனைப்போல பிரக்ஞை அற்று ஸ்தம்பித்திருந்தான். பாவம்-தந்தை மறைவு: சேகர் இல்லாத குறை- வறுமை: இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/69&oldid=1741031" இலிருந்து மீள்விக்கப்பட்டது