உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தந்தையின் ஆணை பிடித்து உள்ளே இழுத்தாள்: தன் தம்பி மாணிக்கம் படுத் திருப்பதையும் மறந்து தாண்டி உள்ளே சென்றான். குமார் ! மாணிக்கம் எழுந்தான்: வீட்டுக்குள்ளே சென்ற அண்ணனைக் கூப்பிட்டான் ! பதில் இல்லை, "மதினி நீங் களாவது மனமிரங்குங்கள்:' -என்று மன்றாடினான்! இதைப் பார்த்து வீதியிலே பெறுங்கூட்டம் கூடி விட்டது: எல்லோரும் பரிதாபப்பட்டார்கள்; அட்டே ! தேவராஜர் குடும்பம் இப்படியா போக ணும் ? இவன் இங்கே பிரிஞ்சி வந்துட்டான்! அங்கே கடன்காரன் தெவராஜர் வீட்டை ஜப்தி செய்கிறான். . கூட்டத்திலே ஒருவன் இரக்கப்பட்டு இப்படிப் பேசினான், இதை மாணிக்கம் கேட்டுவிட்டான். • ஜப்தி! . எங்கள் வீட்டிலா ஜப்தி?" தீயை மிதித்தவனைப்போல் மாணிக்கம் தன் வீட்டை நோக்கி ஓடினான். 21. அட்டைப் பூச்சிகள்! வட்டிக்கடை நடத்துபவர்கள் சாதாரணமானவர் களா ? மனித சமுதாயத்திலே வாழும் அட்டைப் பூச்சி கள்! ஏழை மக்களை கசக்கிப் பிழியவும், இரத்தத்தை உறிஞ்சவும் அவர்களுக்கு உரிமை உண்டு ! சாதாரண இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் அட்டைப் பூச்சிகளை யாரும் அடித்துக் கொல்லலாம்! ஆனால் தொழிலாளர் வர்க்கத்தின் ஜீவனை. மூச்சை வினாடிக்கு வினாடி விலை பேசும் இந்த விஷப் பூச்சிகள், சட்டப்படி பாதுகாப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/73&oldid=1741035" இலிருந்து மீள்விக்கப்பட்டது