உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 'முற்றிலும் சீர்படவேண்டுமானால் 77 அரசாங்கம் இதை கவனித்து வைத்திய கல்லூரி பாடதிட்டத்தை மாற்ற வேண்டும்." இப்படி சில உறையாடல்கள் நளினாவுக்கும் சேக ருக்கும் அடிக்கடி நடக்கும். அன்று நளினா தன் படுக் கையையும் தூக்கிக் கொண்டு ஹாலை நோக்கி வந்தாள். சேகருக்கு ஒரே ஆச்சரியம். 'எங்கே பயணம் நளினா?" . உம்! உம்! நீங்களும் புறப்படுங்கள். ஒருவாரம் கிராம சேவை செய்து வரலாம்!" என்று நளினா கூறி யதும் சேகர் தலை சுழன்றது. 'கிராமம்'- சேகர் வாய் முணுமுணுத்தது. "நடராஜா! உன் தம்பி சேகரை ஒரு டாக்டராக்கு! இந்த கிராமத்திலே ஒரு ஆஸ்பத்திரி திறக்க ஏற்பாடு செய்!" தன் தந்தை சாகும்போது கூறிய இந்த வேண்டு கோள் நினைவுக்கு வந்தது. வேதனை அதிகரித்தது. “ கிராமத்தைப் பற்றி பேச்சை என்னிடம் எடுக் நீ வேண்டுமானால் போய் வா. நான் வர காதே! வில்லை ! இப்படி ஆத்திரத்தோடு சேகர் பேசியதை கேட்ட நளினாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'கிராமம்' என்ற உடனே சேகருக்கு ஏன் இந்த துடிப்பு? இது ஒரு புதிராகவே நளினாவுக்குப்பட்டது. 8+

ஏன் கிராம சேவை பிடிக்கவில்லை ?" ஆம் கிராமம் நரகம்! அதை வெறுக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/78&oldid=1741040" இலிருந்து மீள்விக்கப்பட்டது