உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி .79 கண்ணீர் கலங்கிய கண்களுடன், ஆனால் கனல் கக்கும் முறையில் கடுங்கோபத்துடன் இப்படி நடராஜன் கூறியதும் அங்கே ஓரு வினாடிகூட நிற்கவில்லை. "ஐயோ! நில்லுங்கள் என்று நளினா கூப்பிட்டுப் பார்த்தாள்; நடறாஜன் வேகமாக நடந்துவிட்டான்.

-gay சேகர் ! உங்கள் அண்ணாவைக் கூப்பிடுங்கள்!” நளினா கெஞ்சினாள்; சேகர் சிலைபோன்ற நிலையில் இருந்தான். .. சேகர் ! யாருமில்லாத அனாதை என்று சொன்னீர் களே, இப்போது அண்ணன் வந்திருக்காரே. உங்கள் குடும்ப வரலாறுதான் என்ன? எந்த ஊர்? எங்கே வீடு? சொல்லமாட்டீர்களா ?" . " என்னை தொந்திரவு செய்யாதே, குடும்பப் பேச்சை பேசாதே! தயவுசெய்து என்னைத் தனிமையாக இருக்க விடு!" சேகரின் இந்த பதிலைக் கேட்டதும் வேறு வழியின்றி நளினா கிராம சேவைசெய்ய வெளியேறினாள். 23 தீ! தீ !! தீ !!! நடராஜனையும் சேகரையும் ஆ வலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளியம்மாள். வாடிய முகத்துடன் நடராஜன் மட்டும் வந்தான். தன் கண வரைப் பற்றி ஏதாவது செய்தி சொல்வார் என்று ஆனந்தப்பட்டு மறைவாக நின்று பேச்சைக் கவனித் தாள் லீலா. 'நடராஜா 1 சேகரை பார்த்தாயா? எங்கிருக்கி றான்? என்ன சொன்னான்? எப்பொழுது வருவான் !"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/80&oldid=1741042" இலிருந்து மீள்விக்கப்பட்டது