உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி

81 இப்படி சொல்லிக்கொண்டே நடராஜன் தீயினுள் புகுந்தான்; உள்ளே குழந்தை தேவராஜன். அம்மா! அம்மா!" என்று அழுதுகொண்டு நின்றான். தேவ ராஜனை சுற்றிலும் தீ நன்றாக எரிந்துகொண்டிருந்தது. அந்த இடத்திற்கு நடராஜன் செல்ல நினைத்தான்; அப் பொழுது எரிந்துகொண்டிருந்த கட்டை ஒன்று நடராஜன் மேலே விழுந்தது. அதை லட்சியம் செய்யாமல் நடரா ஜன் அந்த இடத்தை அடைந்தான் ; குழந்தையை தூக்கி அணைத்துக்கொண்டான். வெளியில் வர முடியாதபடி தீ சுற்றி வளைத்துக்கொண்டது. குழந்தையாவது பிழைக் கட்டும் என்ற முடிவில் தீயிலேயே நடந்து நடராஜன் வெளியேறினான்; அவன் உடையில் தீ பற்றியது தீ எரிய எரிய தாங்கிக்கொண்டே வெளிவந்தான்; குழந் தையை இறக்கி விட்டுவிட்டு கீழே விழுந்தான். தேவ ராஜனை லட்சுமி வாரி எடுத்துக்கொண்டாள். ஆனால் நடராஜன் ? மரணப் படுக்கையிலே கிடந்தான். கண் எல்லாம் வெந்துவிட்டது. தண்ணி 1 தண்ணி!" என்று புலம் f பிக்கொண்டே நடராஜன் கட்டிலில் கிடந்தான். 85 ஐயோ! டாக்டரை கூப்பிடுங்கள்! டாக்டரை கூப்பிடுங்கள்!" இப்படி வள்ளியம்மாளும் பார்வதியும் ஒப்பாரி வைத்தார்கள். "அம்மா ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்? டாக்டர்தான் நம் கிராமத்தில் கிடையாதே! அதனால் தானே இதே தீ விபத்தால் தந்தை மாண்டார்! இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/82&oldid=1741044" இலிருந்து மீள்விக்கப்பட்டது