உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தந்தையின் ஆணை எனக்கும் அந்த கதிதானம்மா! டாக்டரை கூப்பிடாதே! அவர் இங்கு இல்லை ! " இப்படி நடராஜன் சொல்லும்போது ஒருவன் ஓடி வந்தான். " பயப்படாதீங்க. இன்று நம்ம கிராமத்திற்கு ஒரு டாக்டரம்மா வந்திருக்காங்க. இதைக் கேட்ட வள்ளியம்மாள் தயவுசெய்து அழைத்துவர வேண்டினாள். எதிர்பாராத விதமாக கிராம சேவைக்கு வந்த நளினா அங்கு வந்துசேர்ந்தாள். முதற் சிகிச்சை செய்ய நோயாளி பக்கத்தில் சென்றாள் நளினா. கண்கள் திறக்க முடியாமல் காயமடைந்திருந் தது. அப்படியிருந்தும் சேகரின் அண்ணன்தான் என்று தெரிந்துகொண்டாள்: திடுக்கிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாள். அவள் கண் எதிரே சுவரில் மாட் டப்பட்ட போட்டோவில் சேகர் சிரித்துக்கொண்டிருந் தான். ஒரு முடிவுக்கு வந்தவள்போல் மருந்து பெட்டியை மூடினாள்: புறப்பட ஆயத்தமானாள். வள்ளியம்மாள் தடுத்து நிறுத்தி,மன்றாடினாள்: கெஞ்சினாள். ஆனால் நளினா? என்னால் சிகிச்சை செய்ய முடியாது. நான் போய் ஒரு நல்ல டாக்டரை உடனே அனுப்பி வைக் கிறேன்." இப்படி சொல்லிவிட்டு நளினா நடக்க ஆரம்பித்தாள் ; அதுவரைக்கும் கண்ணீர் விட்டுக்கொண்டே நின்ற லீலா ஓடிவந்தாள். நளினாமுன் மண்டியிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/83&oldid=1741045" இலிருந்து மீள்விக்கப்பட்டது