பக்கம்:தந்தையின் காதலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது தன். வஞந்திர அழகைகெல்லாம் இழந்து, மொட்டை மழுங்கலாய் ஓர் இலைகூட இல்லாமல் பார்க்கறதுக்கே பரிதாபமாய்ப் போய்விடும். நீ சொன்னது ரொம்ட சரி, யாகோவ் ??

கடல் சூரிய கிரணத்தின் அரவணைப்பை ஏற்றுக் கொண்டு, அதற்குப் பிரதியாக அந்திமாலை ஒளிக்கிரரைத் தின் மூலம் வர்ண ஜாலம் பெற்ற அலைகளின் காத சங்கீதத் தால் வரவேற்பு கூறியது. ஒளியின் தெய்வீக மூலபுருஷ ஞன, வாழ்க்கையின் சிருஷ்டி கர்த்தாவான சூரியன், தன் வர்ண ஜால இங்கிதத்தால் கடற் கன்னியிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தான். அந்த அஸ்தமனப் பிரவாக ஜோதியைக் கவனித்துக் கொண்டிருக்கும் அம் மூவரிட மிருந்தும் பிரிந்து துTர தொலைவில், துயிலில் ஆழ்ந்த மக்களே எழுப்பவதற்காக, உதய கால ஜோதியின் இன்பக் கரங்களோடு சென்றுகொண் டிருந்தான்.

  • அட கடவுளே! அந்தச் சூரியன் கீழே இறங்குறதைப் பார்த்து, என் மனசு அப்படியே இளகிப் போறதுமாதிரித் தோணுது!’ என்று மால்வாவைப் பார்த்து வாளிலி சொன்

மால்வா பதில் பேசவில்லை. துரதத் தொஃலக்கடலின் அடிவான விளிம்பில் திரியும் யாகோவின் நீலக் கண்களில் களிப்பு குமிழியிட்டது. பகல் ஒளியின் அந்திம காலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகிச் செல்லும் திசையை வெகு நேரம்வரை வெறித்துப் பார்த்தவாறே மூவரும் உட்கார்க் திருந்தனர். அவர்களுக்கு முன்னுல் கெருப்பின் கனல் ஒளி செய்துகொண் டிருந்தது. அவர்களுக்குப் பின்னல் இரவு தன் நிழல் திரைகளே அவிழ்த்துப் பரப்பியது. மஞ்சள் நிறமான மணல் வெளியில் கறுமை பாய்ந்தது. கடற் பறவைகள் கண் மறைந்து போய்விட்டன. சுற்றியுன்ன சூழ்நிலை முழுவதும் அமைதி பெற்றது; சொப்பன சுகம் போல் இருந்தது.அடக்க முடியாத குதூகலத்தோடு கரையை நோக்கிப் பாய்ந்த அலைகள் பகல் நேரத்தைப் போல் சிரிப்பும்கும்மானியும் போடவில்லை; அதன் ஒவியும் உவகையும் குன்திப் பேசபீன்,

35