பக்கம்:தந்தையின் காதலி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரித்துக் கொண்டிருந்தது. வெம்மை புரையோடிய 60س

இளங் காற்றினுல் சமுத்திரம் கிளர்ச்சி யுற்றுச் சிலிர்த் தது; சிற்றலேகள் வளைந்து சுழிந்து பரந்தன; அந்த அலே களில் சூரிய கிரணம் பட்டு, ஜோதிப் பிரகாசமாய் மினுக் கியது; வெள்ளி மயமான ஆயிரம் புன்னகைக் கதிர்களோடு வாணவெளியின் நீலத்தை கோக்கி நகைத்தது. வானுக்கும், கடலுக்கும் இடையே உள்ள பரந்த ஆகாச வெளியில், குழு றித் தாவும் அலைகளின் நாதம் கிறைந்து ஒலித்தது. ஒன்றன் பின் ஒன்ருகத் தொடர்ந்து தாவும் அலைக் கூட்டம் கடற் கரைச் சரிவை கோக்கிப் பாய்க்தோடின. தெறித்துச் சிதறும் அலைகளும், சிற்றலைப் பரப்பில் பட்டுச் சிதறும் கதிரொளி யும் இங்கிதம் கிறைந்து, முறிவற்ற லயத்தோடு கூடி முயங்கி, உற்சாகத்தோடும், உவகையோடும் பொங்கிக் கொண்டிருந்தன. சூரியனும் ஆனந்த மயமாயிருந்தது; ஏஜெ னில், அது பிரகாசித்தது. கடலும் அப்படித்தான்; ஏனெ னில் அது சூரியனின் ஒளி வெள்ளத்தைப் பிரதிபலித்தது.

கடலின் பட்டுப்போன்ற மார்பகத்தை, காற்று அன் போடு தட்டிக்கொடுத்தது; சூரியன் தன் வெம்மைக் கதிர் களால் கடலின் உடம்புக்கு வெதுவெதுப்பு ஊட்டிற்று; இந்தச் சரச ஆலிங்கனத்தால், கடல் சொக்கிப்போய்ப் பெரு மூச்செறிந்தது. அந்தப் பெரு மூச்சில் உஷ்ணக் காற்றும், உப்பு வாடையும் நிறைந்திருந்தது. பசிய வர்ணம் படைத்த அலைப் பெருக்கு மஞ்சள் நிறமான கடற்கரையில் மோதிச் சிதறி, வெண்ணுசைத் துகள்களேச் சிக்தி மீண்டது. அந்த துரைக் குமிழிகள் மணற் குட்டில் கரைந்துருகி, மெதுவாக மூச்சு விட்டு மறைந்தன. எனினும் கரையில் ஈரம் பாய்ந்து விட்டது. ன்ேடு குறுகலாக வளர்ந்து கடலுக்குள் தலே நீட் டிக்கொண்டிருக்த மேட்டுத் திடல் கரையிலிருந்து கடலுக் குள் இடி சாய்ந்துபோன ஒரு மாபெரும் கோபுரம் போலத் தோன்றியது. அந்தத் திடல் மேட்டின் குடாவ3ளவு, எல்லை காணுக் கடல் வெள்ளத்துக்குள் இறங்கியிருந்ததி: அந்தக் குன்றின் அடிவாரம் ஊர்ப்புறத்தை மறைத்து சிற்கும்