பக்கம்:தந்தையின் காதலி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வோடு, அவன் புன்னகை புரிந்தான்-இதோ மால்வா வந்து கொண்டிருக்கிருள்; அவள் வருவாள்; சிரிப்பாள் அவளது மார்பகம் ஆசையோடு துடிக்கும். தன் உருண்டு திரண்ட மென்மைக் கரங்களால் அவனைத் தழுவுவாள்; ஓசை கேட் கும்படியாக, அவனுக்கு முத்தம் கொடுத்து உபசரிப்டாள். அதைக் கண்டு, கடற் பறவைகள் எல்லாம். பயந்து ஓடும். அங்கே, ஊர்க்கரையில் கடக்கும் விஷயங்களே எல் லாம் அவனுக்கு எடுத்துச் சொல்லுவாள். இருவருமாகச் சேர்ந்து அருமையாக மீன் கறி சமைப்பார்கள், ஓட்கா ழது குடிப்பார்கள்; மணலிலே கீட்டி கிமிர்ந்து படுத்துப் பேசு வார்கள் சரசமாடுவார்கள், பிறகு சந்தியா காலம் சாயும் நேரம், கெட்டிலைக் கொதிக்க வைத்து, தேநீர் குடிப்பார்கள்; ருசியான காரப்பண்டம் தின்பார்கள். பிறகு படுக்கப் போவார்கள்.இப்படித்தான் எல்லா ஞாயிற்றுக்கிழமை யன்றும், விடுமுறை 15ாளன்றும் கடப்பது வழக்கம். வழக்கம் போல் மறுநாள் அதிகாலேயில், கடல் அயர்ந்து தூங்கும் வேளையில் படகேற்றி, அருணுேதயப்பொழுதின் பொன்னிற மான புத்தொளியில், அவளைக் கொண்டுபோய் ஊர்ப்புறத் தில் விட்டுவிட்டு வருவான். அப்போதெல்லாம் அவள் தோணியின் முனைப்புறத்தையே பார்த்துக்கொண்டிருப் பாள்;அவன் துடுப்புத் தள்ளியவாறு அவளேயே பார்த்துக் கொண்டிருப்பான். அந்த மாதிரிச் சமயங்களில் அவளைப் பார்க்க எவ்வளவோ வேடிக்கையாய் இருக்கும். வேடிக்கை தான் ! என்ருலும், ஊட்டி வளர்த்த பூனைக்குட்டி மாதிரி பார்ப்பதற்கு ஆசை தருவதாகவும் இருக்கும். சமயங்களில் அவள் தோணிப் பலகைமீது அமராமல், தோணியின் அடி யில் போய் சுருட்டி மடக்கிப் படுத்து, கன்ருகத் துரங்கவும் ஆரம்பித்துவிடுவாள். அந்த மாதிரி அநேக தடவை அவள் தூங்கியும் இருக்கிருள்.

அன்று கடற் பறவைகள் கூட, சூரிய உஷ்ணத்தால் சுண்டிப்போயின. சில பறவைகள் மணல் வெளியில், இறக் கைகளைத் தொங்கப் போட்டவாறும் அலகுகளைத் திறந்த வாறும் வரிசையாக உட்கார்ந்திருக்தன; மற்றவை அலே களுக்கு மேலாக உற்சாகமற்று நீக்திப் பறக்தன; சத்தம்கூட டோடவில்லை. இ ைர கொத்துவதற்காக வழக்கமாகப் டாய்ந்து தாவும் மூர்க்கச் செயலைக்கூடத் துறந்துவிட்டன.

..?