பக்கம்:தந்தையும் மகளும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தந்தையும்

கரியடுப்பைப் பற்றவைக்க மண்ணெண்ணெய்யைத் துணியில் தோய்த்துப் பற்றவைத்தாலும் அல்லது கரிகளின் மீது ஊற்றிப் பற்றவைத்தாலும் மண்ணெண்ணெய் ஆவி உடனுக்குடன் எரிந்துவிடுகிறது. அதனால் அபாயகரமான தீச்சுடர் உண்டாவதில்லை. ஆனால் கரி எரிந்துகொண்டிருக்கும் பொழுது அந்தத் தணலின்மீது மண்ணெண்ணெய்யை ஊற்றினாலும் அப்பொழுது அதிகமான ஆவி உண்டாகி விடுகிறது. அது காற்றுடன் சேர்ந்து பெரிய சுடராக எரிந்து அபாயம் விளைவித்து விடுகிறது. அத்துடன் ஆவியும் காற்றும் சேர்ந்த கலவையில் தீப்பற்றினால் அது வெடிக்கும் தன்மையுடையது. அதனாலும் அபாயம் உண்டாகும்.

124அப்பா! இறந்து போனவர்களுடைய உடலை அப்படியே வைத்திருக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதை எப்படிச் செய்கிறார்கள்?

அம்மா! இறந்துபோனவர்களுடைய உடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியும். அந்த மாதிரி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்து நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசர்களுடைய உடல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்காக அவர்கள் பிரமாண்டமான "பிரமிடு" என்னும் கல்லறைகள் கட்டினார்கள். அவற்றைப் பார்ப்பதற்காக ஆயிரக் கணக்கான மக்கள் உலகத்தின் சகல பாகங்களிலிருந்தும் போகிறார்கள்.

இறந்தவர்களுடைய ஆன்மா மீண்டும் உடலை நாடி வரும் என்று எகிப்து நாட்டு மக்கள் நம்பியபடியினால் தான் அவ்விதம் உடலை அழிந்து போகாமல் பாதுகாத்தார்கள். அப்படிப் பாதுகாப்பதற்காக அவர்கள் மூன்று வித முறைகளைக் கையாண்டதாகப் பண்டைக் கிரேக்க சரித்திராசிரியர் ஹெரோடற்றஸ் என்பவர் கூறுகிறார். ஆனால் அந்த முறைகள் இவை என்று இப்பொழுது அறிந்து கொள்வதற்கில்லை.