பக்கம்:தந்தையும் மகளும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தந்தையும்

சோப் குமிழியில் உள்ள காற்றைப் பொதிந்து உள்ளும் புறமுமாக இரண்டு சோப் நீர் உறைகள் உள. இந்த உறைகளும் அவற்றிற்கு இடையேயுள்ள இடமும் சேர்ந்து அநேக முப்பட்டைக் கண்ணாடிகள் போல் ஆகிவிடுகின்றன. அதனாலேயே சோப் குமிழியில் அழகான வர்ண ஜாலங்கள் தோன்றுகின்றன.

131அப்பா! நாம் குளிக்கவும் துணி வெளுக்கவும் சோப் உபயோகிக்கிறோமே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் குளிப்பது எதற்காக? நம்முடைய உடம்பில் தோலின் அடியில் வேர்வை உறுப்புக்களும் அதன் அருகில் எண்ணெய் உறுப்புக்களும் இருப்பதை நீ அறிவாய். வேர்வை உறுப்புக்களிலிருந்து வேர்வையும் எண்ணெய் உறுப்புக்களிலிருந்து எண்ணெய்யும் எந்நேரமும் வெளியே வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் தூசியும் அழுக்கும் வேர்வையோடும் எண்ணெய்யோடும் சேர்ந்து உடம்பில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றை நீக்கி உடம்பைச் சுத்தமாகச் செய்வதற்காகத்தான் நாம் குளிக்கிறோம்.

ஆனால் வெறும் தண்ணீர் அவற்றை நீக்கிவிட முடியாது. தண்ணீருக்கு எண்ணெய்யை அகற்றும் குணம் கிடையாது என்பதை நீ அறிவாய். அதனால்தான் நாம் குளிக்கும் போது சோப் உபயோகிக்கிறோம்.

சோப்பை நீரில் கரைத்து உடம்பில் தேய்த்தால் அப்பொழுது சோப் எண்ணெய்யுடன் சேர்ந்து ஒருவிதக் குழம்புபோல் ஆகிவிடுகிறது. நாம் உடம்பில் தண்ணீர் ஊற்றும்போது அந்தக் குழம்பு தண்ணீருடன் அகன்று விடுகிறது. அத்துடன் உடம்பிலுள்ள தூசி முதலியவைகளும் சோப் நீருடன் சேர்ந்து நீங்கிவிடுகின்றன.

இதேபோல் தான் நாம் துணிக்குச் சோப் உபயோகிக்கும் போதும் துணியிலுள்ள எண்ணெய்யும அழுக்கும்