பக்கம்:தந்தையும் மகளும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தந்தையும்

பாத்திரத்தைக் கறுப்பாகி விடுகின்றன. ஆனால் பாத்திரத்தைக் கரியடுப்பில் வைத்துச் சமைக்கும் போது, கரி மட்டுமே எரிவதால் கரியமில வாயு மட்டுமே உண்டாகிறது. அது பாத்திரத்தைக் கறுப்பாக்குவதில்லை.

149அப்பா! மழை காலத்தில் உப்பும் சீனியும் கட்டியாக ஆகிவிடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! உப்பும் சீனியும் தண்ணீரில் எளிதில் கரையக்கூடியவை என்பதை நீ அறிவாய். மழை காலத்தில் காற்றில் நீராவி நிறைந்திருக்கும். அந்த ஆவி உப்பிலோ சீனியிலோ பட்டதும் குளிர்ந்து தண்ணீர்த் துளிகள் சேர்ந்த உப்பும் சீனியும் தனித்தனிப் பரல்களாக இராமல் ஒன்று சேர்ந்து கட்டியாக ஆகிவிடுகின்றன.

150அப்பா! பாலை பாட்டிலில் ஊற்றி அடைத்து வைத்தால் நேரமானதும் திடீரென்று அடைப்பான் துள்ளி வெளியே போய் விழுந்துவிடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம் அம்மா! அந்த மாதிரி சில வேளைகளில் நேர்வதுண்டு. பாட்டிலில் உள்ள பால் புளித்துவிட்டால் அப்பொழுது அதில் உண்டாகும் வாயு விரிந்து அடைப்பானை வெளியே தள்ளிவிடும்.

அம்மா! பால் புளியாவிட்டாலும் பாலுக்கு மேலாக நிற்கும் காற்று அதிக உஷ்ணமான சமயங்களில் விரிந்து விசையொடு அடைப்பானைத் தூக்கி எறிந்துவிடும்.

பாலை நிறைய ஊற்றிப் புளிக்காத படி குளிர்ந்த தண்ணீருக்குள் வைத்திருந்தால் இந்த மாதிரி அடைப்பான் துள்ளி வெளியே போவது ஏற்படாது.

151அப்பா! தட்டையான திரி விளக்கைவிட வட்டமான திரி விளக்கு அதிகப் பிரகாசமாக எரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?