பக்கம்:தந்தையும் மகளும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தந்தையும்

பிராணவாயு அதிகம், அகத்தே குறைவு. அதனால் திரி சிறிது சிறிதாக எரியாமலிருந்து சுட்டியாகி விடுகிறது. அப்படிக் கட்டியானதும் அது எண்ணெய்யை ஆவியாகி எரிய விடாமல் தடுத்து விடுகிறது அதனால் தான் வெளிச்சம் மங்குகிறது. உடனே நாம் திரியிலுள்ள கரியைத் தட்டி விடுகிறோம். அது மறுபடியும் நன்றாக எரிகிறது.

153அப்பா! செம்பைத் தங்கமாக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! செம்பு, ஈயம் போன்ற விலை குறைந்த சாதாரண உலோகங்களைத் தங்கமாக்குவது எப்படி என்று ஆதிகால முதல் எல்லா தேசங்களிலும் அறிஞர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். அப்படிச் செய்யும் முறையை ரசவாத முறை என்று கூறுவார்கள். பண்டைக் காலத்தில் இருந்தவர்கள் உலோகங்கள் என்பவை பாதரசமும் கந்தகமும் பல அளவில் சேர்ந்து உண்டானவைகளே என்பதாகவும் தங்கத்திலேயே மிகவும் குறைந்த கந்தகம் இருப்பதாகவும் எண்ணினார்கள். அதனால் செம்பு முதலியவற்றிலுள்ள கந்தகத்தில் பெரும் பகுதியை வெளியே போய்விடும்படி செய்து விட்டால் செம்பு தங்கமாக ஆய்விடும் என்று நம்பினார்சள். அதனால்தான் அந்த முறைக்கு ரசவாதம் என்ற பெயர் உண்டாயிற்று. ஆனால் செம்பைத் தங்கமாகச் செய்ய இதுவரை எந்த ரசவாதியாலும் முடியவில்லை.

ஆனால் இக்காலத்து விஞ்ஞானிகள் தங்கத்தை மட்டுமின்றி வேறு தனி வஸ்துக்களையும் உண்டாக்குவதற்குக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

அம்மா! தங்கம் போன்ற தனி வஸ்து ஒன்றைப் பிரித்துக்கொண்டே போனால் இனிப் பிரிக்க முடியாது