பக்கம்:தந்தையும் மகளும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

149

என்னும் அளவு சிறியதான துண்டு ஒன்று கிடைக்கும் அல்லவா? அந்தத் துண்டை அறிஞர்கள் அணு என்று கூறுவார்கள்.

ஆனால் இப்போது விஞ்ஞானிகள் அணுவையும் பிரித்துவிடலாம் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு அணுவிலும் மையத்தில் ஒரு துகள் இருப்பதாகவும் எலக்டிரான் என்னும் எதிர் மின் துகள்கள் அதைச் சுற்றி வருவதாகவும், சுற்றி வரும் எதிர்மின் துகள்கள் எத்தனையோ அத்தனை நேர்மின் துகள்கள் மையத் துகளில் இருப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அத்துடன் மையத் துகளில் உள்ள நேர் மின் துகள்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததே அந்த வஸ்துவின் குணம் என்றும் கூறுகிறார்கள். ஆதலால் மையத் துகளை மாற்றிவிட்டால் வஸ்துவும் மாறிவிடும். ஈய அணுவிலுள்ள நேர் மின் துகள்கள் மூன்றை நீக்கி விட்டால் அப்பொழுது ஈயம் தங்கமாகிவிடும். அவ்வாறு நேர் மின் துகள்களைச் சேர்த்தோ நீக்கியா ஒரு தனி வஸ்துவை மற்றொரு தனி வஸ்துவாகச் செய்வதற்கு வேண்டிய முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆகவே செம்பையோ ஈயத்தையோ தங்கமாக ஆக்க முடியும். ஆயினும், நமக்கு வேண்டிய அளவு தங்கம் இன்னும் யாரும் செய்ய முடியவில்லை.

154அப்பா! தேள் சாணத்தில் உண்டாவதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அந்த மாதிரிதான் சொல்லுகிறார்கள். ஆனால் அது தவறு. சாணத்தை எருவாகத் தட்டி வைத்திருக்குமிடத்திலேயே அதிகமான தேள்கள் காணப்படுவதால் அவ்விதம் சொல்லுகிறார்கள். ஆனால் சாணம் தேளாக