பக்கம்:தந்தையும் மகளும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தந்தையும்

கொள்ள முடியும். அதனால் எதிரி வரும் வரை மெதுவாக மேய்ந்து நன்றாக மென்று தின்ன முடியும், ஆடு மாடுகளைப் போல் அவசர அவசரமாக அரை குறையாக மென்று விழுங்கி விட்டுப் பிறகு அசைபோட வேண்டிய அவசியமில்லை.

அதனால்தான் ஆடுமாடுகளுக்கு மேல் வாயில் மட்டும் முன்பற்கள் இருக்க, குதிரைக்கு முன்பற்கள் மேல் வாயிலும் கீழ்வாயிலும் இருக்கின்றன. அது போலவே குதிரை அசைபோட வேண்டிய அவசியமில்லாததால் ஆடு மாடுகளுக்கு நான்கு அறைகளுள்ள வயிறு இருப்பது போலக் குதிரைக்குக் கிடையாது. குதிரைக்கு நமக்கு இருப்பது போன்ற ஒரே வயிறு தான் இருக்கிறது.

177அப்பா! குதிரைக்கு மட்டும் விரல்கள் இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஆதியில் சகல மிருகங்களுக்கும் விரல்கள் இருக்கவே செய்தன. அவைகள் எல்லாம் நம்மைப்போல் பாதம் முழுவதையும் ஊன்றியே நடந்து கொண்டிருந்தன. ஆனால் பிற மிருகங்கள் தாக்க வந்தால் அதிக வேகமாக ஓடினால் தானே தப்பிப் பிழைக்க முடியும்? அதிக வேகமாக ஓடும் போது நம்முடைய குதிங்கால்கள் தரையில் படுவதில்லை. நம்முடைய விரல்களையே ஊன்றி ஓடுகிறோம். அவ்வாறே அக்காலத்தில் பல மிருகங்கள் விரல்களை ஊன்றி ஓடி உயிர் பிழைத்து வந்தன.

குதிரை அத்தகைய மிருகங்களில் ஒன்று,ஆதியில் அது ஒரு பூனையளவாகவே இருந்தது. அப்பொழுது அதன் காலில் ஐந்து விரல்கள் இருந்தன. ஆனால் அது எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகக் குதிங்காலை ன்றாமல் விரல்களை மட்டுமே ஊன்றி ஓடி வந்தபடியால் அதன் உடல் அமைப்பு நாளடைவில் சிறிது சிறிதாக மாறி இப்பொழுதுள்ள உருவத்தை அடைந்துவிட்டது.