பக்கம்:தந்தையும் மகளும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

169

பலவிதமான பொறுக்க முடியாத துன்பங்கள் உண்டாகி விடுகின்றன. அதிலும் முக்கியமாகச் சுவாசிப்பதும் விழுங்குவதுமே அசாத்தியமாகி விடுகின்றன. நோயாளிக்குப் பொறுக்க முடியாத தாகம் உண்டாகும். ஆனால் தண்ணிரை விழுங்க முடியாது. தண்ணிரை நினைத்தால் கூடப்போதும். உடனே தொண்டை அடைத்துக் கஷ்டப்படுவார். இறுதியில் மூச்சுவிடக் கஷ்டப்படுவார். அப்பொழுது அவர் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் போது நாய் குரைப்பது போன்ற சப்தம் கேட்கும். அதைக் கொண்டுதான் பைத்தியக்கார நாயால் கடிக்கப் பட்டவர்கள் நாய்போல் குரைப்பார்கள் என்ற எண்ணம் உண்டாயிருக்கிறது. ஆனால் அவர் வாய் குரைப்பதில்லை,

அவருடைய வாயில் ஊறும் உமிழ்நீர் அதிகக் கட்டியாக இருக்கும். அதை அவர் விழுங்க அஞ்சி வெளியில் துப்பிக்கொண்டே யிருப்பார். அத்துடன் அவருடைய வாயின் தாடைகளில் வலிப்புக்காணும். அப்பொழுது பார்த்தால் அவர் எதையோ கடிக்கப் போவது போலத் தோன்றும். அதை வைத்து நாயால் கடிக்கப்பட்டவர்கள் நாய்போல் கடிக்க வருவார்கள் என்றும் கூறுவதுண்டு.

இந்நோய்கண்டால் அது நாலைந்து நாளில் கொன்று விடும். ஆதலால் எந்த நாய் கடித்தாலும் உடனே டாக்டரிடம் சென்று காட்டுதல் நல்லது. உடனே டாக்டரிடம் காட்டுவதால் நோயைக் குணமாக்கி விடமுடியும்.

176அப்பா குதிரையும் ஆடுமாடுகள் மாதிரி புல் தின்னும் பிராணியாயிருந்தும் அவைகளைப் போல் அசை போடுவதில்லையே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! குதிரையும் புல் முதலிய தழைகளைத் தான் தின்னுகிறது. ஆனால் அதன் கால்கள் நீளமாகவும் இருக்கின்றன. விரைவாகவும் ஒடமுடியும். ஆதலால் ஏதேனும் எதிரி வந்தால் அது வேகமாய் ஒடித் தப்பித்துக்