பக்கம்:தந்தையும் மகளும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தந்தையும்

விடும் தலையை அது தின்று விடுவதுமுண்டு. அந்தத் தலையில் விஷப்பைகள் இருந்தாலும் அதிலுள்ள விஷம் கீரிப்பிள்ளையை ஒன்றும் செய்யாது. ஆனால் பாம்பு மட்டும் அதைக் கடித்து விடட்டும், அப்பொழுது பாம்பின் விஷம் அதைக்கொன்று விடவே செய்யும்.

கீரிப்பிள்ளை ஆப்பிரிக்காவிலும் ஆசியா கண்டத்தின் தென் பாகத்திலும் காணப்படும் சிறு மிருகம். அது இந்தியாவில் ஏராளமாக உண்டு. அது பாம்பைக் கண்டு சீறும் கோபமுடைய பிராணியாயிருந்தாலும் அதை எளிதாகப் பழக்கி விடலாம். அநேக வீடுகளில் அதை நாய் போலும் பூனை போலும் வளர்ப்பதுண்டு. அது சுமார் ஒரு முள நீளமிருக்கும். அதன் நிறம் மஞ்சள் கலந்த சாம்பலாகும்.

182அப்பா! நம்மைப் போல் நிமிர்ந்து நிற்கக்கூடிய மிருகம் உண்டா?

அம்மா! குதிரை, மாடு போன்ற மிருகங்கள் சில சமயங்களில் பின் கால்களை ஊன்றி முன் கால்களைத் தூக்கி நட்டமாக நிற்பதுண்டு. ஆனால் அவை எல்லாம் மிகவும் சிறிது நேரமே அவ்வாறு நிற்க முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காரு என்னும் மிருகம் புல்மேயும்

பொழுதுதான் மற்ற மிருகங்களைப் போல் நான்கு கால்களில் நிற்கும். மற்றநேரங்களில் எல்லாம் பின் கால்களையும் வாலையும் ஊன்றி நிமிர்ந்தே நிற்கும். அதற்குத் தக்கதாக அதன் பின் கால்களும் வாலும், அதிக பலமான அதன் தசைகள் உடையனவாக அமைந்திருக்கின்றன. அதன் உடல் ஆறு அடி நீளமும் வால் நாலடி நீளமும் இருக்கும்