பக்கம்:தந்தையும் மகளும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தந்தையும்

பத்து நிமிஷ நேரங்கூட அது தண்ணீருக்குள் மூழ்கியிருக்கமுடியும். அப்பொழுது அது தன்னுடைய நாசித்துவாரங்களையும் காதுகளையும் மூடிக் கொள்ளும். அதற்கு ஏதேனும் நோவு உண்டாகுமானால் அப்பொழுது அதன் தோலில் சிவப்பு நிறமான வேர்வை முத்து முத்தாக உண்டாகும். நீர் யானைக்கு ரத்தமாக வேர்க்கும் என்று சொல்வது அதைக் கொண்டு தான். ஆனால் அது சிவப்பு நிறமாயிருந்த போதிலும் ரத்தமன்று. ஒருவிதமான எண்ணெய் வஸ்துவேயாகும்.

185அப்பா! மனிதர்களைத் தவிர வேறு எந்தப் பிராணியாவது சிரிப்பது உண்டா?

அம்மா! மற்றப் பிராணிகளிடம் காணப்படாமல் மனிதர்களிடம் மட்டும் காணப்படும். விசேஷ குணங்களுள் ஒன்று சிரிப்பு என்பது என்று கூறுவார்கள். ஆயினும் கழுதைப் புலி என்று ஒரு காட்டு மிருகம் இருக்கிறது. அது மற்ற மிருகங்கள் கொன்று தின்றுவிட்டு மீதியாக விட்டுப் போகும் பிணங்களைத் தின்னும் வழக்க முடையதாக இருப்பதால் அதைக் காட்டிலுள்ள தோட்டி என்று கூறுவதுண்டு. அது சப்தம் போடுவது பைத்தியக்காரன் சிரிப்பது போலிருக்குமாம். கேட்க பயங்கரமாக இருக்குமாம்.

186அப்பா! சில காட்டுப்பன்றிகள் உடம்பில் முள் இருக்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அவ்விதம் உடம்பில் முள் உள்ளவைகளை முள்ளம் பன்றி என்று கூறுவார்கள். அது மலைச் சரிவுகளில்தான் வசிக்கும். மூன்றடி நீளமிருக்கும். அதன் முதுகிலும் விலாவிலும் முட்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு முள்ளும் ஏழெட்டு அங்குல நீளமிருக்கும். வாலிலுள்ள