பக்கம்:தந்தையும் மகளும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

177

முட்கள் வெண்ணிறமாயும் மற்ற முட்கள் கறுப்பாயும் இடையிடையே வெண்ணிற வளையங்கள் உடையனவாயுமிருக்கும் முன் காலத்தில் அதைக் கொண்டு வந்து "நிப்' போட்டு பேனா மாதிரி உபயோகிப்பதுண்டு. ரோமங்கள்தான் அடர்ந்து நெருங்கி ஒன்றாகச் சேர்ந்து இப்படி முட்கள் போல் ஆகியுள. இதர முட்கள் சாதாரணமாக எப்பொழுதும் நம்முடைய ரோமம் போல் மடிந்தே கிடக்கும். நமக்குக் குளிர் ஏற்பட்டால் நம்முடைய ரோமம் சிலிர்த்துவிடுகிறது. அதுபோல் முள்ளம் பன்றி ஏதேனும் எதிரியைக் கண்டு பயப்படவோ, கோயப்படவோ, செய்யுமானால் அப்பொழுது அதன் முட்கள் சிலிர்த்துவிடும். வாலை ஆட்டும். அப்பொழுது அதிலுள்ள முட்கள் சலசலக்கும்.

முள்ளம் பன்றி எதிரியை நேராகச் சென்று தாக்காது. வெகு விரைவாகப் பின்காட்டி ஒடித் தன் பின்புறமுள்ள முட்களை எதிரியின் முகத்தில் ஆழமாகப் புதைத்து விடும். அந்த முட்கள் எதிரியின் உடம்பில் தங்கி எதிரியைக் கொன்றுவிடும். இவ்வாறு பெரிய புலிகள்கூட அதனிடம் அகப்பட்டுக்கொண்டு இறந்துவிடுவதுண்டு. பன்றி இவ்வாறு முட்களை இழந்தபோதிலும் அவையிருந்த இடங்களில் புதிய முட்கள் முளைத்துவிடும்.

187அப்பா! பாலைவனங்களில் ஒட்டகத்தில் ஏறித்தான் போகமுடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பாலைவனம் என்பது வெறும மணற்காடு தான் என்பதை அறிவாய். அங்கே மண்ணும் கல்லும் கிடையாதிருப்பதால் சாலைகள் அமைக்க முடியாது.

அதனால் எவ்வித வண்டியிலும் போக முடியாது.குதிரையில் ஏறிப் போகலாம் என்றால் குதிரை பாலைவனத்திலுள்ள சூட்டைத் தாங்க முடியாது. அத்துடன் பாலைவனத்தில் அதற்கு வேண்டிய தண்ணீரும் புல்லும் போதுமான அளவு கிடைக்கமாட்டா.

த-12