பக்கம்:தந்தையும் மகளும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

191

காகத்தான் அம்மா காய்கறிகளை உப்புச்சேர்த்து வெயிலில் வைத்து உலர வைக்கிறாள். அவற்றிலுள்ள நீர் போய்விடுகிறது. அவை வற்றலாக ஆகிவிடுகிறது. சிறிதுகூட நீர் இல்லாமல் உலர்ந்து போனால் அவைகளில் கிருமிகளோ பூசணமோ உண்டாகிக் கெடுத்துவிட மாட்டா. கிருமியும் பூசணமும் ஈரப்பசையுள்ள இடத்தில் தான் உண்டாகும். உப்புச் சேர்த்திருப்பதாலும் கிருமிகள் உண்டாகா. உப்பு ஒரு கிருமி நாசினியாகும். வற்றலாகக் காய்ந்து போனாலும் அவை சுவையாகவே யிருக்கும். உயிர்ச்சத்துக்களும் அநேகமாகக் குறைந்து விடமாட்டா.

206அப்பா! மழை பெய்யாத பாலை நிலங்களில் முட்செடிகள்தான் உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம். அம்மா! அதிகமாக முட்செடிகள் தான் உண்டாகும். அவைகளுங்கூட அதிக உயரமாக வளரமாட்டா, கட்டையாகவே இருக்கும். ஆனால் வேர்மட்டும் அதிக நீளமாக ஓடும். ஈச்ச மரம் தெரியுமல்லவா. அதன் கன்று பார்க்கச் சிறிதாகவே இருக்கும், எளிதில் பிடுங்கிவிடலாம் தோன்றும், ஆனால் பிடுங்கிப்பார். பிடுங்க முடியாது. அதற்குக் காரணம் அதன் வேர் நீளமாகக் கீழே போயிருப்பதுதான். ஏன் அப்படி நீளமாயிருக்கிறது. தெரியுமா? பாலை நிலத்தில் மழை குறைவு. அத்துடன் அப்படிக் குறைவாகப் பெய்யும் மழை ஜலமும் தரையில் ஊறி அதிக ஆழத்தில் போயே தங்கும். மேற்பரப்பிலுள்ள ஜலத்தைச் சூரியன் ஆவியாக மாற்றிவிடுவான். அதனால் ஆழத்திலுள்ள நீரை உண்பதற்காகத்தான் அங்குள்ள செடிகளின் வேர் நீளமாக இருக்கின்றன.

நீர் குறைவாகக் கிடைப்பதால் செடிகள் குட்டையாக வளர்கின்றன. உயரமாகச் செழித்து வளரமுடியாமல் போகிறது. செடிகள் குட்டையாயிருந்தால் ஆடு மாடு முதலிய மிருகங்கள் அவற்றை எளிதில் தின்றுவிடும்