பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

115


23. விழலுக்கு இறைத்த நீர்

"இந்த நாட்டில் சாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம், மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள்.

மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல .

நானோ, மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர் தேக்கத்தைக் கண்டு, கொசுக்களை அழித்துத் தடுக்கும், வைத்தியன் போன்றவன்."

- தந்தை பெரியார்

"ஒரே சாதி" என்கிற முறை உருவாக வேண்டும் என்று ஈ.வெ.ரா. விரும்பினார். ஆனால், முயன்றும் தீராமல், காங்கிரசில் ஜாதி உணர்வு ஆழமாக வேர் விட்டிருந்தது.

அதனால் 1925-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க.தலைமையில் நடைபெற்ற காங்கிரசு மகாநாட்டில், "வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை வேண்டும்", என்று கோரிக்கை எழுப்பினார்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. இத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். ஈ.வெ.ரா.வுக்கு இது தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்தது.

இதே தீர்மானத்தை இதற்கு முன், 1920-ல் திருநெல்வேலி மகாநாட்டிலும், 1921-ல் தஞ்சாவூர் மகாநாட்டிலும், 1922-ல் திருப்பூர் காங்கிரசு மகாநாட்டிலும், 1924-ல் சேலத்திலும் திருவண்ணாமலையிலும் நடைபெற்ற மாகாண காங்கிரசு