பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தந்தை பெரியார்


இதைக் கண்டித்துப் பெரியார் 'தேசியக் கொடியை எரிக்கும்' போராட்டத்தை அறிவித்தார்.

1950 - குடி அரசு நாளை துக்க தினமாக அறிவித்து அறிக்கை விட்டார்.

தமிழக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வை புரிந்து கொண்ட நேருஜி, "இந்தி மொழி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை; அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது" என்று வாக்களித்தார்.

1950 - ஜூன் 20-ம் நாள் தமிழக அரசு இதை அறிவித்தது.

இந்தி எதிர்ப்பில் பெரியாரின் மகத்தான வெற்றி இது.


33. போராட்டங்களும்... எதிர்ப்புகளுமே- பெரியாரின் அணிகலன்கள்...

"ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில் தான், மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத் தொண்டு என்று வந்து விட்டால், அவை இரண்டையும் பார்க்கக் கூடாது."

- தந்தை பெரியார்

'பொழுது விடிந்தால், இன்றையப் போராட்டம் என்ன?'

இன்று எதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும், என்கிற எண்ணத்துடனேயே கண் விழிப்பது பெரியாருக்குப் பழகிப் போய் விட்டது.