பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

171



1922 - கள்ளுக்கடை மறியல் செய்ததால் கோவைச் சிறையில் வைக்கப்பட்டார்.

1923 - குடியரசு பத்திரிகையைத் தொடங்க அரசாங்கத்தில் பதிவு செய்தார் (19.1.1923).

1924 - தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தில் தலைவராய்ப் பணியாற்றினார். வைக்கம் போராட்டம், இரு முறை சிறை வைக்கப்பட்டார். வெற்றி கண்டார். வைக்கம் வீரர் என்று புகழப்பட்டார்.

வ.வே.சு. ஐயர் சேரன் மாதேவியில் காங்கிரசு இயக்கத்தில் நிதியுதவி பெற்று நடத்தி வந்த குரு குலத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமையை எதிர்த்தார்.

1925 - குடியரசு வார இதழைத் தொடங்கினார் (ஈரோடு 2-5-1925). காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாட்டில் வகுப்புரிமை தீர்மானம் கொண்டுவர முயன்றார். தோல்வி அடைந்தார். அதனால், காங்கிரசை விட்டு வெளியேறினார்.

1927 - காந்தியாரைச் சந்தித்தார் (பெங்களுர்). 'திராவிடர்' நாளிதழுக்கு ஆசிரியராக விளங்கினார். தம் பெயருக்குப் பின்னால் இருந்த 'நாயக்கர்' என்னும் சாதிப்பெயரை விலக்கினார்.

1928 - ருவோல்ட் (Revolt) என்னும் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார் (17.11.1928).

1929 - செங்கல்பட்டு முதல் மாநில சுயமரியான்த மாநாடு நடைபெற அடிப்படையாக இருந்தார்.