பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆசிரியரும் பேரெழுச்சி கொண்டனர். கோ. சி. பெரியசாமிப் புலவர், குழந்தையா, நன்னன், நா.மு. மாணிக்கம், ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், இரா. தண்டபாணி, க.அ. மதியழகன், பூ. கணேசன், இரா. செழியன், த.மா. திருநாவுக்கரசு, கி. தியாகராசன், ஆகியோரை மாநாட்டில் அறிமுகம் செய்தனர் குடந்தை மாணவர்களான எஸ். தவமணி இராசன், எஸ். கருணானந்தம், இரா. சொக்கப்பா ஆகியோர்.

1943 முதல் “குடி அரசு” இதழில் கட்டுரைகள் தீட்டிவந்த க. அன்பழகன், பச்சையப்பன் கல்லூரியின் தமிழாசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார். தமது வெண்கலக் குரலோசை துணைசெய்யத் தமது ஒல்லியான உருவத்துடன் தமிழகத்தில் அவர் முழங்காத சுய மரியாதை இயக்க மேடையில்லை. அண்ணாவுடன் திராவிட முன்னேற்றக் கழகங்கண்டவர். 21-2-45-ல் பெற்ற வெற்றிச் செல்வி அம்மையாரின் வாழ்க்கைத் துணை நலம் இவருக்குப் பேருதவியாயிருந்தது. சிதம்பரம் கல்யாண சுந்தரனாரின் மூத்தமகனாகிய இவரைப் போலவே அடுத்த இளவல்களும் ஆசிரியர்களாயினும், இயக்கத்துடனேயே இணைந்த குடும்பத்தினராவர். சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை, நாடாளுமன்றம் மூன்றிலும் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். கலைஞரின் அமைச்சரவையில் நல் வாழ்வுத்துறையின் பொறுப்பிலிருந்தார். பின்னர் கழகம் சோதனைக்குள்ளான போழ்தில், தி.மு.க. பொதுச் செயலாளராகியுள்ளார். பேராசிரியர் என மக்கள் இவரை அன்பொழுக அழைக்கின்றனர்.

டார்ப்பிடோ சனார்த்தனம் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மும்மொழி வல்லுநர். எளிய தோற்றம், வெடிக்கு முன் எரிமலை, பெரியாரின் பெரு விருப்புக்குப் பாத்திரமானவர். சட்டமன்ற மேலவை, மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். தமிழகத்தில் சுறுசுறுப்புடன் சுற்றிச் சுழன்று, விறுவிறுப்புடன் உரையாற்றியவர். இவர் காணாத ஊரே இல்லை எனலாம். ஆங்கிலத்தில் பத்திரிகை, நூல்களை எழுதியுள்ளார். சிலகாலம் தி.மு. கழகத்திலிருந்தார். இப்போது அ.இ. அ.தி.மு.க. எங்கிருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகளுக்கும், தந்தை பெரியாருக்கும் இவர் சிந்தையில் முதல் இடம்!

பெரியசாமிப்புலவர், குழந்தையா, திருநாவுக்கரசு ஆகியோர் தொடர்ந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பி வருவோர். பெரியசாமிப் புலவர் நல்ல பரம்பரையை உருவாக்கியவர், மறைந்து விட்டார். நா.மு. மாணிக்கம், செட்டிநாடு தந்த பகுத்தறிவுப் புலவர். பெருமைக்குரிய “குடி அரசு”