பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
 13. பிரித்தார்
மணியம்மை திருமணம் - கழகம் பிளந்தது - ஜனவரி 26, 1950 துக்க நாள் - “பொன் மொழிகள்” தண்டனை - வகுப்புரிமைக்குத் தீங்கு - “அரசியல் சட்டம் ஒழிக” - சுரண்டல் தடுப்புப் போர் - 1949 முதல் 1951 முடிய,

திருக்குறள் மூடநம்பிக்கை குறைவாக உள்ள பழைய நூல். அதிலுள்ள முதலதிகாரமான கடவுள் வாழ்த்து கூடக் கடவுளுக்கு உருவமோ வடிவமோ கற்பிக்கவில்லை. புராணக் கற்பனைக் கதைகள் அதில் நிறைய இடம் பெற இல்லை. உரையாசிரியர்கள் வேண்டுமானால் பிற்காலத்தில் ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருக்கலாம். மூல நூலில் வள்ளுவர் அறிவுக்குப் பொருத்தமாகவே எழுதி உள்ளார். அவர் தமிழனாக இருந்து விட்டதால், அதிலும் அவர் நூல் காலங்கடந்து, சிறப்புடன் பல தடைகளையும் தாண்டி, மங்காப் புகழுடன் விளங்குவதால், அந்த நூலாசிரியர் பார்ப்பானுக்குப் பிறந்தார் என்றும், கதை கட்டிவிட்டார்கள். ஆரிய நச்சுக் கருத்துகளுக்குப் பெரிதும் இடந்தராமல், வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எனினும் வள்ளுவர் குறளைப் புலவர்கள் - பண்டிதர்கள் - தமக்குள் அடக்கிக் கொண்டார்கள். இராமாயணம், பாரதம், பாகவதம், கீதை இவற்றைப் புறக்கணித்துவிட்டுத் தமிழர் திருக்குறளை ஏந்த வேண்டும். ஆரியப் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும் - என்ற, தமது இனவுணர்வின் அடிப்படையில் எழுந்த வேட்கைக்குப், பெரியார் 1949 பொங்கல் திருநாள் வாரத்தில் நல்லதொரு விருந்து கண்டார். சென்னையில், சனவரி 15, 16 நாட்களில் வள்ளுவர் குறள் மாநாடு, பெரியார் நடத்தினார். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ச. சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., ஏ. சக்கரவர்த்தி நயினார் போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப், பாமரர் கையில் குறளை ஒப்படைக்கச் செய்தார் பெரியார். குடி செய்வார்க்கில்லை பருவம்; மடி செய்து, மானம் கருதக் கெடும்-என்ற குறள் பெரியாருக்கு மிகமிகப் பிடித்தமானதாகும். மார்ச்