பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்




 
14. அழித்தார்


வயது வந்தோர் வாக்குரிமை பெற்ற முதல் தேர்தல் காங்கிரஸ் தோல்வி - ரயில் நிலைய இந்தி அழிப்பு - திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் - தென்பகுதி ரயில்வேமென் யூனியன் - சுயமரியாதைப் பிரசார நிறுவனம் - பிள்ளையார் உடைப்பு - புத்தர் மாநாடு குலக்கல்வி எதிர்ப்பு - பர்மா மலேயா பயணம் - 1952 முதல் 1954 முடிய.

னக்கு இருபத்தொரு வயதாகி விட்டதா; இந்தா வாக்குச்சீட்டு! ஜனநாயகத்தை நிலை நாட்டி விட்டோம்; எங்களை மறக்காதே என்று காங்கிரசார், தாம் நடைமுறைக்குக் கொண்டு வந்த புதிய வாக்குரிமைத் திட்டத்தின் கீழ் 1952-ஆம் ஆண்டில் புதிய பொதுத்தேர்தலை நடத்தினர்; வெற்றி தமக்கே என்று உறுதியாக நம்பினர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் - அதாவது சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையில் - 375 சட்டமன்ற இடங்களில், 371 இடங்களுக்குக் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கடந்த 1951 அக்டோபர் 21ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய முன்னணி சார்பில் நிறைய வேட்பாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுக் கட்சி பெரியாரின் பரிபூர்ண, நிபந்தனையற்ற. ஆதரவை முழுமையாகப் பெற்றிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், தனது மதுரைப் பொதுக்குழுவின் தீர்மானப்படி, திராவிட நாடு பிரிவினைப் பிரச்னையில் நம்பிக்கை வைத்துப், பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறச் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் வாதாட விருப்பமுள்ளவர்கள், கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால், அவர்களை

கவிஞர் கருணானந்தம்