பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

250


பிறவியே என்பது. நம்மில் சிலர்கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் நடப்பில் இல்லை! நபி அவர்களின் உபதேசம் அமுலில் இருக்கிறது. அடுத்து, விக்கிரக ஆராதனையைக் கண்டித்தார்; மேலும், தான் என்ன சொல்லியிருந்தாலும், தமது பகுத்தறிவு கொண்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தான் கடைசி நபி என்றார். நீங்கள் இது பற்றி எப்படி எண்ணினாலும், அவருக்குப் பிறகு யாருமே இவ்வளவு சிறந்த கருத்துகளைக் கூறவில்லை என்பதைத்தான் நான் சொல்ல முடியும்!”- என்று பெரியார் நபிகள் விழாவில் சொற்பொழிவாற்றினார்.

சுற்றுப் பயணப் பொதுக் கூட்டங்களில், பார்ப்பானே வெளியேறு என்ற தத்துவத்தைப் பெரியார் விளக்கினார். “வெள்ளைக்காரனாவது நம்மைத் தொடச் சம்மதித்த அந்நியன், இங்குள்ள அந்நியனாகிய பார்ப்பான் நம்மைத் தொட்டால் தீட்டு என்கிறானே! வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்ற என்னென்ன செய்தோமோ அப்படிப்பட்ட காரியங்களை இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்கும் செய்துதான் தீர வேண்டும். ஆனால் நாங்கள் முட்டாள்களல்ல; அவர்கள் செய்த காரியங்களைத் திருப்பிச் செய்ய தண்டவாளத்தைப் பிடுங்கினாலும் தந்திக் கம்பியை அறுத்தாலும், ரயிலைக் கவிழ்த்தாலும், தபாலாபீசைக் கொளுத்தினாலும் நமக்குத் தான் நட்டமே தவிரப் பார்ப்பானுக்கல்லவே! ஆச்சாரியாரே சொல்லிவிட்டார், இப்போது நடப்பது தேவாசுரப் போராட்டம் என்று காந்தியார் இவர்களை எவ்வளவோ உயரத்தில் தூக்கி நிறுத்தினாரே அவரையே ஒரு பார்ப்பான் சுட்டுத் தள்ளிவிட்டானே! இந்தப் பார்ப்பனர் இப்போது நாம் படிக்கவே கூடாதென்று சட்டம் கொண்டு வந்து விட்டாரே! ஆகவே இன உணர்வு பெறுங்கள். பார்ப்பான் இன்னொரு பார்ப்பானை எதிர்த்ததாக வரலாறே கிடையாது. ஆனால் நாமோ?

முதலில் இன்று நடைபெறும் புரோகித ஆட்சியை ஒழிக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நேரு புரோகிதர் பரம்பரை, சென்னை மாகாண முதன் மந்திரி புராகிதரின் பேரர். இப்போது ஆந்திராவில் முதன் மந்திரியானவரும் புரோகிதரின் மகன். ஆகவே அரசியலிலும் சமுதாயத்திலும் “புரோகித ஆட்சி ஒழிய வேண்டும் என்பதற்குப் பொருள் ஒன்றுதான்! இந்தியாவுக்குச் சக்கரவர்த்தியாய் முப்படை வைத்திருந்தவன் இன்று எங்கே? இந்தியாவில் 562 சிற்றரசர்கள் வாழ்ந்தார்களே, இன்று அவர்களின் கிரீடங்கள் எங்கே? ஜமீன்தார்கள் ஒழிந்தார்கள். பணக்காரன் ஒழிக்கப்படுகிறான். ஆகையால், அன்னச் காவடிப் பார்ப்பான் நமக்கு எம்மாத்திரம்?” என்று பெரியார் வினாவிலேயே விளக்கங்கள் தந்தார். பெரியாரின் போராட்டம்