பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

272


நிபந்தனைகள் சொல்லி, அவற்றை ம.பொ.சி ஏற்றுக்கொள்வதனால், திராவிடர் கழகம் எல்லைப் பிரச்சினையில் அவருடன் முழு வலிமையோடு கலந்து, எதிர்ப்புப் போரில் ஈடுபடும் என்றார். ம.பொ.சி மழுப்பிவிட்டார். குழப்பிவிட்டார். ஆனால், பெரியார் வராதது போல் குற்றம் சுமத்தப்பட்ட போது, 29.1.1956 அன்று வேலூரில் பெரியார், தமக்கும் சிவஞானத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரத்தை வெளியிட நேரிட்டது:

எல்லைகளைப் பாதுகாப்பது, அல்லது தக்க வைத்துக் கொள்வது என்பதில் முழுவதும் உடன்பாடு. அடுத்து இந்தி எதிர்ப்பில் மற்றவர்களும் ஈடுபட வேண்டும். மூன்றாவது, படை, போக்குவரத்து, வெளியுறவு தவிரப் பிற இலாகாக்களை மத்திய அரசு, மாநிலங்களிடமே முழுமையாகத் தந்து விட வேண்டும். நாலாவது, சென்னை ராஜ்யத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட வேண்டும். கடைசியாக ஐந்தாவது, தட்சிணப் பிரதேச அமைப்பை எதிர்த்து முறியடிப்பது, ஆகிய ஐந்துதான். முதல் சந்திப்பில் ஒத்துக் கொண்டு சென்றவர். கம்யூனிஸ்டு முதலிய மற்றக் கட்சியினர் இவ்வளவு நிபந்தனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள் என்று காரணங்காட்டித் தயங்கினார். வெளியூரிலிருந்த பெரியாருக்குத் தந்தியும் கடிதங்களும் அனுப்பிச் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்து கொண்டாவது சென்னை வந்து, தன்னை உடனே சந்திக்க விழைந்தார். அப்படியே பெரியார், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனே சென்னைக்கு விரைந்து, பொது நண்பர் வீட்டில் ம.பொ சிவஞானத்தைச் சந்தித்தார். எல்லைகளை மீட்கும் பிரச்சினை மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொண்டு, மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்வோம். இதில் அனைத்துக் கட்சிகளும் வாருங்கள்; ஒருங்கிணைந்து போராடலாம். என்றார். ம.பொ.சி! அவர் இப்படிப் பின்னடைந்த காரணம் புரியாமல், பெரியார், தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறித் திரும்பி வந்து விட்டார்! தன்னைப் பற்றி வெளியில் தவறாகத் திரித்துக் கூறக்கூடும் என்பதால் பெரியார், ம.பொ.சி பல்டிபற்றி வேலூரில் ஒன்று விடாமல் கூறி முடித்தார்.

20.2.56 அன்று தேவிகுளம் பீர்மேடு தமிழருக்கே சொந்தம் என்ற போராட்டத்துக்கு ஆதரவாகப் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெறத் தி.மு.க, தமிழரசுக்கழகம், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகள் முயன்று, வெற்றி பெற்றுத் தந்தன; திராவிடர் கழகமும் காங்கிரசும் இதில் கலந்து கொள்ளவில்லை.

திராவிட மாணவர் கழக மாநில மாநாடு, திரச்சியில் 5.2.1408 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பெங்களூரில் தட்சிணப் பிரதேச அமைப்பு குறித்து இறுதியாக முடிவு செய்ய பிப்ரவரி 1, 2 தேதிகளில்