பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ish nonesense. மூட்டை முடிச்சுகளோடு அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும்’ என்றாரே அதே நேரு பண்டிதர். 1958 ஜனவரி 6 ஆம் நாள் சென்னை மீனம்பாக்கம் வந்திறங்கிய போதும், மாலையில் சென்னை மவுண்ட் ரோட்டில் வலம் வந்தபோதும், லட்சக்கணக்கான கருங்கொடிகள் உயர்ந்து நிற்க, “நான்சென்ஸ் நேரு! Go Back ! திரும்பிப்போ” என்ற முழக்கம், இடியோசையாய்ச் செவிப்பறையைக் கிழிக்க - போலீஸ் தடியடி தர்பார் நடத்த - இருவர் பலியாக - இப்படி ஓர் எதிர்ப்பை இதுவரை கண்டதில்லை என நேரு திகில் கொள்ள இம்மாதிரிப் போராட்டத்தின்போது, தலைவர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டும் நிகழ்த்திக் காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம்.!

21.12.57 “விடுதலை”யில் இப்படி ஒரு வினா எழுப்பப் பட்டிருந்தது:- தேசியம் பேசும் தமிழா! இந்நாட்டில் நீ இவற்றை எங்காவது காணமுடியுமா? பிராமணாள் முடிதிருத்தகம், பிராமணாள் லாண்டிரி, கொத்து வேலை தோதாத்ரி அய்யங்கார். மரமேறி மகாதேவசர்மா, மாடுமேய்க்கும் மாதவராவ், பிணம்சுடும் பிச்சுமணி தீட்சிதர், ஏர் உழும் ஏகாம்பர அய்யர், நடவு நடும் நாகலட்சுமி சுப்புணி அய்யர் சாணம் எடுக்கும் விசாலாட்சி சீனு சாஸ்திரி,.........?