பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

296


உட்பட்டுச், சாதியை ஒழிப்பதென்பது, இயலாத காரியம். அதனால் தான் ஜின்னா அவர்கள் கத்தியைக் காட்டிப் பாகிஸ்தானைப் பெற்றுக் கொண்டார்.

ராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக்கு வந்ததும் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 30 நாட்களில் அதைத் திரும்பப் பெறாவிடில் பார்ப்பனர்களைக் குத்தும்படி எதிரி (பெரியார்) பொதுமக்களைப் பார்த்துச் சொன்னதும் ஆச்சாரியார் பதவியை விட்டே விலகினார். ஆகவே சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒரே வழி, பலாத்காரத்தைப் பயன்படுத்தித், தமிழ்நாட்டை விட்டுப் பார்ப்பனர்களை விரட்டுவதே ஆகும். இந்த அதி தீவிரத் திட்டத்தைக் கையாளுமுன்பு, இந்திய அரசியல் சட்டம் கொளுத்தப்பட வேண்டும். அதன்மூலம் சாதி ஒழிப்புக்கு வகை செய்யப்படாவிட்டால், காந்தி படத்தை எரிக்க வேண்டும். அதிலும் பயனில்லையானால், காந்தியார் சிலைகளை உடைக்க வேண்டும். இவற்றிலும் பயன் ஏற்படாவிட்டால், நேருவின் கொடும்பாவியையும், அடுத்து நேருவின் படத்தையும் எரிக்க வேண்டும்!

இவை அத்தனை முயற்சிகளிலும் வெற்றிகிட்டாவிடில், பார்ப்பனர்களை அடிக்கவும் உதைக்கவும் கொல்லவும் வீடுகளைக் கொளுத்தவும் வேண்டும். எதிரிக்கு 78 வயது முடிந்து 79 தொடங்கியுள்ளதால் இனி தாம் நீண்டநாள் வாழ்த்து வெற்றியைக் காண்போமா என்ற அய்யத்தால், விரைந்து இத்தகைய செயல்களைச் செய்ய நினைக்கிறார்; அதற்கேற்பத் திட்டங்களைத் தீட்டுகிறார்.

கண்ணை மூடிக் கொண்டு இவரைப் பின்பற்றுகிறவர்கள் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அதனால் இவருடைய திட்டங்களால், பயங்கர விளைவுகள் ஏற்படத்தான் செய்யும்.

பிரதமர் பேச்சினால் இந்தத் தீர்ப்பு பாதிக்கப்படலாம் என எதிரி நினைக்கிறார், அவர் நம்பத் தயாராயிருப்பாரானால், அவருக்குத் தெரிவித்துக் கொள்வேன், இத்தீர்ப்பு நீதியுணர்வோடும் நல்ல மனச்சாட்சியோடும்தான் எழுதப் பட்டுள்ளது."

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுத் தலைவணங்கித் தமிழர்களின் தன்மானத் தந்தை, இன்முகத்தோடும் அடலேறு போன்ற எடுப்பான தோற்றத்தோடும், ஆறுமாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்கச், சிறை புகுந்தார்!

உலக வரலாற்றில், தனது நாட்டின் அரசியல் சட்டத்தையே எரித்து, மாபெரும் கிளர்ச்சி செய்த முதல் தலைவர் பெரியார்தான்.! அதனை நிகழ்த்திக் காட்டிய மாபெரும் நிகரற்ற வீரரைத், தமது பதவி காரணமாய்ப் பண்டித்தேரு, ‘அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது Child-