பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்





 
 16. சுழன்றார்
விடுதலையானார் - வடநாடு பயணம் - பெரியார் திடல் அமைப்பு - தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்பு - காமராசர் கரத்தைப் பலப்படுத்துதல் - காமராசர் விலகல் - உச்சவரம்பில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குக் கண்டனம் - இந்தி எதிர்ப்புக் கலவரங்கள் - இராமாயண எரிப்பு - 1958 முதல் 1966 முடிய

“கூண்டுக்குள் சிங்கம். இன்று 15 ஆம் நாள். இன்னும் எத்தனை நாள்?” என்ற பெட்டிச் செய்தி, பெரியார் படத்துடன், விடுதலை தலையங்கப் பகுதியின் மேல், தினந்தோறும் இடம் பெற்று வந்தது. அரசியல் சட்ட எரிப்புப் போரில் அரசின் கணக்குப்படி, 4000 பேர் சிறைக்கோட்டம் புகுந்தவர்கள். மாணவர்கள், பெரியார் சிறையிலிடப்பட்டதை கண்டித்து, வகுப்புகளுக்குச் செல்ல மறுத்தார்கள் சில ஊர்களில் விழாப் கொண்டாடுவதில்லை; சுவையான உணவு அருந்துவதில்லை; சுகபோகங்களை விரும்புவதில்லை; பெரியார் விடுதலையாகும் வரை பார்ப்பனர்களுக்கு முடிவெட்ட மாட்டோம்; சலவை செய்ய மாட்டோம் என்ற ரீதியில் பல்வேறு வகையான சபதங்களை மக்கள் மேற்கொண்டார்கள். 30.12.57 அன்றுதான் பார்ப்பனர் உணவு விடுதிமுன் கடைசி நாள் மறியல் இது 5.5.1957 அன்று துவக்கப்பட்டதல்லவா?

9.12.57 அன்றுதான் பிரதமர் நேரு திருச்சியில் பெரியாரை, மிகத் தரக்குறைவாகவும், தமது தகுதி பதவிகளுக்கு இழிவு நேரும் வகையிலும், இழித்தும் பழித்தும் பேசினார். அவர் மீண்டும் 1958 ஜனவர் 6 சென்னை வருவதாகத் திட்டமிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் 29.12.57 ல் தனது நாகர்கோயில் பொதுக் குழுவில் தீர்மானித்தபடிப், பெரியாரை இழிவாகப் பேசிய நேருவுக்கு, பிரமாண்ட அளவில் கருப்புக்கொடி காட்டி தமிழ்மக்களின் ஏகோபித்த எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டது. சிறையிலிருந்தவாறே பெரியார், அநாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கவேண்டி, “இந்த முறை