பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. தஞ்சைத் தொகுதியில் காலண்டர், சோப்பு, சுனோ, பவுடர் போன்ற பொருட்களைக் கொடுத்து ஓட்டுப்பெற்றதாக கம்யூனிஸ்ட் மணலி கந்தசாமி அவதூறு கூறினார். தேர்தல் நின்று போயிருந்த அந்தநல்லூர் தொகுதியிலும் காங்கிரசை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும், அதற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் வே. ஆனைமுத்து பொறுப்பில் பாடுபடவேண்டுமென்றும், 4.3.1962 அன்று பெரியார் சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்தே அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் விருப்பத்திற்கிசைய அந்தநல்லூரில் காங்கிரஸ் வென்று, திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றது.

பெரியார் 6.3.1962 “விடுதலை”யில் மைனாரிட்டி சமுதாயம் என்ற தலைப்பின்கீழ் தீட்டியுள்ள தலையங்கம் அருமையான நல்லதொரு கருத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவது ;– ஒரு நாட்டில், மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாசாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ இருக்குமானால், அந்த நாட்டின் நலத்துக்கும் பொது வளர்ச்சிக்கும் அவை கேடாகவே முடியும். பார்ப்பானுக்கு பயந்து நடந்ததாலும், முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்து வந்ததாலும், அவர்கள் பச்சைத் துரோகம் செய்ய முற்பட்டு, அதன் பலனை இன்று தமிழ்நாடு நன்றாக அனுபவிக்கிறது. வெள்ளைக்காரனுக்குப் பயந்து, சுதந்திரம் கேட்டதானது, சாணிக்குப் பயந்து மலத்தின் மீது கால் வைத்தது போல் ஆகிவிட்டது. இன்றையச் சுதந்திரம் சுதந்திரமே அல்ல என்பது சுதந்திர உதயநாள் முதல் எனது கருத்தாகும். இன்மேலாகிலும் தமிழ்நாடு சுதந்திரத்துடன், சுயமரியாதையுடன் வாழச் சிந்திக்க வேண்டும். நான் ஒரு மனித தர்மவாதி என்பதையும், எதையும் திரை மறைவு இல்லாமல் திகம்பரமாய்க் கண்டே கருத்துக்கொள்கிறவள் என்பதையும் யாவரும் அறிவார்கள் - என்பதாக முடிகிறது.

பெரியார், உடல் முற்றிலும் குணமாகாத நிலையில், உடனடியாக வெளியில் கூட்டங்களுக்கு வரப்போவதில்லை என்றும், சென்னை பெரியார் திடலில் 1 லட்சம் பெறுமான கட்டிட வேலை நடைபெற ஓர் ஆறுமாத காலம் ஆகலாம் என்றும், அதுவரை மிக முக்கிய கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கே வெளியில் வர இருப்பதாகவும் மார்ச் 6-ஆம் நாள் அறிவித்தார். தொடர்ந்து விடுதலை தலையங்கப் பகுதியில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்தத் தேர்தலில் வெற்றி பெரியாருக்கே என்றாலும் லாபம் இராஜாஜிக்குதான். எப்படியென்றால், அவர் கண்ணீர்த்துளிகளின் கொள்கைகளையும் தனித்தன்மையையும், மாற்றியும் குறைத்தும் விட்டார். திராவிடநாடு பிரச்சினையை இராஜாஜி கேலி செய்கிறார். தி.மு.க. வினர் குரங்குகள்; நான் ராமன் என்கிறார். அவர்களும்