பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

344


வந்து தொத்தும் என நினைக்கிறேன்“ என்றும் பெரியார் சூளுரை புகல நேர்ந்தது. இராம லீலாவும் டெல்லியும்: ஒழிக யூனியன் ஆட்சி என்றெல்லாம் தலையிட்டுப் பெரியார் கடுமையான தலையங்கக் கட்டுரைகளை விடுதலை”யில் எழுதினார். தொட்டதற்கெல்லாம் ஸ்ட்ரைக் ஏற்பட அரசாங்க பலவீனமே காரணம் என எடுத்துக் காட்டினார். 1.10.196 அன்று பெரியார் திடலில் 84-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட போது, நடிகவேள் ராதா 10,000 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார் பெரியாரிடம்.

பம்பாய் கவர்னராக இருந்த டாக்டர் சுப்பராயன் சென்னைப் பொது மருத்துவமனையில் 6.10.62 அன்று காலை 9.30 மணிக்கு மரணமடைந்தார். பெரியார் திருச்சியிலிருந்து தொலைபேசி வாயிலாக அனுதாபச் செய்தி அனுப்பினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வி.சுப்பிரமணியம் இறந்து போனார். பின்னர் பார்ப்பனத் துணைவேந்தர் அமர்த்தப்பட, இது வழி வகுத்துவிட்டது! |

நீண்ட நாட்களாக வடக்கெல்லைப் பகுதியில் வால் நீட்டி வந்த சீனா இந்தியா மீது போர் தொடுத்துவிட்டது. சமாளித்துத் தீரவேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா வலுவில் உந்தப்பட்டது. நாட்டிலுள்ள நல்லோரெல்லாம் சீனாவை எதிர்த்து முறியடிக்க வேண்டுமென ஆக்க பூர்வமான ஆதரவைத் தாமே முன் வந்து. மனமுவந்து வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ராஜாஜி தமது இயல்பின்படிக் குதர்க்கமான சில ஆலோசனைகளைத் தெரிவித்து வந்தார்: பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனனை விலக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு என்று, ஒரு கட்சி அரசாக இல்லாமல், எல்லாக் கட்சிகளையும் இணைத்துத் தேசிய அரசு அமைத்திட வேண்டும். ஐந்தாண்டுத் திட்ட நிறைவேற்றத்தைக் கைவிட வேண்டும் - என்பதாக! இந்த யோசனைகள் கதைக்குதவாதவை என 4.11.62ல் மத்திய அரசு நிராகரித்தது. சென்னை சட்ட மன்றம் 30.10.62 அன்று சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. பெரியார் சுற்றுப்பயணத்தில் இருந்தார். 29.10.62 அன்று மாதிரி மங்கலத்திலிருந்து ஊர்வலமாக வந்து, குத்தாலம் பொதுக் கூட்டத்தில் பேசினார். பிறந்த நாளை ஓட்டிப் பெரியாருக்கு 84 கலம் நெல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. எது எப்படியானாலும், யுத்த முயற்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியது தான் - என்றார் பெரியார்.

விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம் அனுபவித்து வந்த அண்ணா , வேலூர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளிவந்தவுடன் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில், சீனாவை முறியடிக்க இந்திய சர்க்காருடன் ஒத்துழைப்பதாகவும், அதற்கு நல்லெண்ண