பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


செய்தது. சென்னையில் அரசியல் சட்டத்தை எரிப்பதற்காக, அறிஞர் அண்ணா வந்த போது, வழியிலேயே 5,11.63 அன்று கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். மாவட்டந்தோறும், அறிவிக்கப்பட்ட தி.மு.க. முன்னணியினர். அரசியல் சட்ட எரிப்பில் ஈடுபட்டுக் கைதாயினர். மதுரை முக்கிய களமாயிருந்தது. மதுரை முத்து, தென்னரசு குழுவினர் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றனர். கலைஞர் கருணாநிதி, என்.வி. நடராசன், மன்னை நாராயணசாமி ஆகியோர் மீது, தூண்டிவிட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. அரசியல் சட்ட எரிப்பு மூலம் இந்தி எதிர்ப்புப் பணிக்குத் திராவிட முன்னேற்றக் கழகமும் தன் பங்கினைச் செலுத்திவிட்டது!

“தேர்தல் பேய், தாண்டவம் ஆடப்போகிறது" என்று 1984 புத்தாண்டுச் செய்தி போலப், பெரியார், வரவிருக்கும் மாநகராட்சி நகராட்சி மன்றத் தேர்தல்களை மனத்திற் கொண்டு, "விடுதலை"யில் தலையங்கம் தீட்டினார். புவனேஸ்வரில் காமராசர் தலைமையில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ், சமதர்மத்திட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆவடியில் உருவாக்கப் பெற்ற ஜனநாயக சோஷலிசம், தீவிரமாகக் காங்கிரசால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் மேலும் முன்னேற்றப் பாதையின் மைல்கல்லாகவே, புவனேஸ்வரி மாநாடு விளங்கக் கண்டு பெரியார் - வரவேற்றார். டி.டி. வீரப்பா தலைமையில், 6ந் தேதி திருச்சியில் பேசும்போது, பெரியார் காங்கிரஸ் இப்போது மிகவும் மாறிவிட்டது, ஆவடி மாநாட்டிற்குப் பிறகு நில உச்சவரம்புச் சட்டம் நிரை வேற்றப்பட்டது. கல்வித் துறையில் பின்தங்கிய வகுப்பினர் முன்னேறுவதற்கான நல்ல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சாதி ஒழிப்பிலும் காங்கிரஸ் இப்போது அக்கறை காட்டிவருகின்றது. ஆகவே நானும் காங்கிரஸின் தீர்மானங்களை ஆதரிக்கிறேன். இப்போது காங்கிரசின் சோஷலிசப் போக்கினால், கம்யூனிஸ்டுகளும் காங்கிரசை ஆதரிப்பதால், நான் இனி கம்யூனிஸ்டுகளை எதிர்க்க மாட்டேன். அதனால், வரவிருக்கும் நகர மன்றத் தேர்தல்களில், காங்கிரசை பலப்படுத்தாமல் இருந்ததால்தான், இது வளர எல்லாருக்கும் கல்வி, உடை, உணவு, வீடு கிடைக்கவில்லை . இனி கிடைக்கும் என்றெல்லாம் கூறியதோடு, எழுதவும் செய்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேசி வருவதையும், பெரியார் கண்டித்து, இது நாணயமாகாது என்ற இடித்துக் கூறவும் தவறவில்லை . 'திராவிடர் கழகம் காங்கிரசோடு இணைவது இயலாது! ஆதலால் எங்களைத் தவிரத் தனிப்பட்டவர்கள் யாரும் காங்கிரசில் சேருவதை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்ற பெரியார் பச்சைக்கொடி காண்பித்தார்!"