பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


எகஸ்பிரஸ்" ஏடு சென்னையில் இப்போது ஆளுங்கட்சியின் (தி.மு.க.) கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூடத் தராதீர்கள் என்று மக்களைக் கோரிய வேண்டுகோள், “விடுதலை”யிலும் இடம் பெற்றது. காமராசர் தேர்தல் பிரசாரத்தில் பம்பரமாய்ச் சுழன்றார்.

வடசென்னைப் பகுதியில், 18.2.64 அன்று பேசும்போது “திமுகவினர் தி.க.விலிருந்து பிரிந்து பத்து வருடங்களில் நல்ல “பிசினஸ்” செய்து விட்டார்கள். இவர்களை நம்பாதீர்கள். இவர்களுக்குச் சொந்தத் தலைமை கூட இல்லை ; இரவல் (ராஜாஜி) தான்! வேட்டைக்காரன் (எம்.ஜி.ஆர்.) வருவான். ஏமாந்துவிடாதீர்கள்“ என்று காமராஜ் பேசினார். சென்னை மாநகராட்சி, அரசாங்க வேலை வாய்ப்பு அலுவலக வாயிலாகத் தனக்கு ஊழியர்களை நியமிக்க மறுக்கிறது என்று உள்ளாட்சி அமைச்சர் மஜீத் குற்றம் சுமத்தினார். ‘இது மாநகராட்சியின் உரிமைகளில் தலையிடுவதாகாதா? என்றது நிர்வாகத்திலிருந்த தி.மு.க..!’ வரிகள் அதிகமாகிவிட்டன. ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டன என்று கட்டுப் பாடான பிரச்சாரத்தில் ”விடுதலை“யும் ஈடுபட்டிருந்தது. சென்னையே பிரதான மையமாக இருந்தது. எனினும் தேர்தல் முடிவுகள் வேறு விதமாயிருந்தன! 23.2.64 பிற்பகல் 3.30 மணி வரையில் ”விடுதலை"வெளியிட்ட முடிவுகளின் படி காங்கிரஸ் 16, கம்யூனிஸ்டு 1, சுயேச்சை 1, கண்ணீர்த்துளிகள் 7. முற்றும் முடிந்தபின், 25.2.64 அன்று வெளியானவாறு, காங்கிரஸ் 40, கண்ணீர்த்துளிகள் 19, முஸ்லீம் லீக் 5, கம்யூனிஸ்டு 1, சுயேச்சை 4, காங்கிரஸ் 86 வட்டங்களிலும் தி.மு.க. 83 வட்டங்களிலும் சென்னையில் போட்டியிட்டன. தி.மு.க. ஆட்சியே சென்னை மாநகராட்சியில் தொடர்ந்தது!

9.2.64 அன்று பாபநாசத்தில் அஞ்சல் ஊழியர் மாநில மாநாட்டில் பெரியார் பேசினார். தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை தீர ஒரே பரிகாரம், சமதர்மத் திட்டம்தான். அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளத்தில் வேற்றுமை அதிகமாயிருத்தல் கூடாது. தொழிலாளர்களும் தமது அரசிடம் விசுவாசமாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சுயலாபத் தூண்டுதலால், தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் போராட்டத்தில் இறங்கக் கூடாது. என்றெல்லாம் அறிவுரை புகன்றார் பெரியார். லாரி, பஸ், கார் விபத்துகளைத் தடுக்கவும் பெரியார் ஓர் ஆலோசனை கூறினார். அதாவது, ஒருமுறை விபத்துக்குள்ளான வண்டிகளின் ஒட்டுநருடைய லைசன்சையே பறிமுதல் செய்துவிட வேண்டும் என்பதுதான் அந்த யோசனை. மேலும், நம்முடைய இழிவான நிலைமைகளுக்குக் காரணமே, நம்மில் ஒருவருக்கொருவர் அபிமானமில்லை; இழிவைப் பற்றி நமக்குக் கவலையேயிருப்பதில்லை - என்று காரணங் கூறினார் பெரியார்.

டெல்லி உச்சநீதி மன்றம், பெரியாருக்குப் புதிய பணி ஒன்றைத் தர, உதவியாயிருந்து விட்டது! தமிழ்நாட்டில் அரசு நிறைவேற்றிய