பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

367


னார்கள். 10-ஆம் தேதி அடுத்து. 13, 14 நாட்களில், திருவையாறு சாதி ஒழிப்பு, திராவிடர் கழக மாநாடுகள் பெரியார் சிறப்புரையாற்றுகையில், “தோழர்கள் செருப்பையும், துடைப்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டு, ஊரூராய்ச் சென்று, வீதியில் அவைகளை அடித்துக்கொண்டே சாதியே ஒழிந்து போ! என்று சொல்ல வேண்டும்” என்று கூறினார். ஆத்திரம் கொப்பளிக்க அவ்வாறு கூறினரே ஒழியப் பிற்பாடு, அதற்கான திட்டமோ, நாளோ பெரியார் குறிப்பிடவில்லை.

காமராசர், சங்கரநயினார்கோயிலில் பேசும்போது, 12.6.67 அன்று, 1967- ல் என்ன, 1977-ல் கூடக் காங்கிரசை அசைக்க முடியாது என்றார் பெரியார் அதே நாளில் கீழ்வேளூரில் ‘நாத்திக ஆட்சியே சமதர்மம் அளிக்கும்’ என்று பேசினார். “விடுதலை“ சந்தா பற்றி மீண்டும் நினைவூட்டிப் பெரியார் விடுத்த வேண்டுகோள், ”விடுதலை"யில் பெட்டிச் செய்தியாக வந்தது. பெரியார் திருச்சியில் தங்கிப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளை நடத்த இருப்பதால், மே 17க்குப் பிறகு அந்த வகுப்புகள் முடியும் வரையில் தோழர்கள் பெரியாரைக் கூட்டங்களுக்கு அழைக்காதிருக்குமாறு புலவர் கோ. இமயவரம்பன் அறிவித்தார். புதுவையில் 17.6.64 அன்று நடந்த பாரதிதாசன் இரங்கல் கூட்டத்தில் நேரு, பாரதிதாசன் இருவர் மறைவுக்குமே பெரியார் வருந்தினார். அடுத்த நாட்களில் பெரியார் 10.7.64 வரை திருச்சியில் தங்கியிருந்தார். ஜூலை மாதத்தில் சுற்றுப் பயணம் குறைவுதான். ஆனால் ஆகஸ்டில் அதை நிறைவு செய்து விட்டார்.

காமராசரின் 62-ஆவது பிறந்த நாளான ஜூலை 15-ல், “விடுதலை” பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தது; “காமராஜரும் பார்ப்பன வீழ்ச்சியும்” என்று, அடுத்தது தலையங்கமும் தீட்டியது. 20ந் தேதி காமராஜர் சென்னைக்கு வந்தபோது, பிரம்மாண்டமான வரவேற்பு வைபவங்கள், பார்த்தோரைப் பிரமிக்கச் செய்தன ஊர்வலத்தில் 5 லட்சம் மக்கள், 1,000 அலங்கார டிரக்குகள், 500 பஸ்கள் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் 15 லட்சம் மக்கள் அன்று சென்னைக்கு வருகை தந்த பெரியாரும், மணியம்மையாரும் காலையில் காமராஜர் இல்லம் சென்று, நேரில் வாழ்த்துக் கூறினர். வெளியில் வந்து, அழைத்துச் சென்று, அமர்த்தி, உரையாடி, வாயில் வரை வந்து, வழியனுப்பி வைத்தார் காமராசர். அன்று காலை 10.30 மணிக்கு, சென்னைப் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த, முதலமைச்சர் பக்தவத்சலத்தையும், பெரியாரும் மணியம்மை யாரும் கண்டு, நலம் விசாரித்தனர். காமராசர் பிறந்த நாள் விசேடங்களை நேரில் கண்ணுற்ற பெரியார் இது பெரிய தேசிய விழா, போலிருந்தது என்றே குறிப்பிட்டிருந்தார். காமராசர் படத்துடன், அவரது “சமதர்மம் பற்றிய பொன்மொழிகள்“, ”விடுதலை"யில், கட்டத்துக்குள், தொடர்ந்து 15 நாட்கள் வரை பிரசுரமாயின.