பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் தமிழ்நாடு என்றும் வழங்குவதுதான் அரசின் முடிவு என்று அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் 24.7.64-ல் அறிவித்தார்.

“எதிரிகளால் குறை சொல்ல முடியாத அரசாங்கம் காங்கிரஸ் அரசாங்கம். இதனிடம் சமதர்மத் திட்டம் இருப்பதால் காங்கிரசில் மக்கள் சேருவதும் இதை ஆதரிப்பதும் தவறல்ல” என்று ஜூலை 19 முதல் 21 வரை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பல கூட்டங்களில், காரைக்கால் பகுதிக்குள், பெரியார் சொற்பொழிவாற்றினார். சென்னையை அடுத்த ஆலந்தூரில் 23-ம் நாளன்று கடவுள் ஒழிப்பு மாநாடு, புதிதாக நடைபெற்றது; காஞ்சி சி.பி. ராசமாணிக்கம் தலைமையில், வீரமணி திறந்து வைத்தார். பெரியார், எம்.ஆர். ராதா, தங்கராசு கலந்து கொண்டனர். தீர்மானங்களை விளக்கிப் பெரியாரே ”விடுதலை"யில் எழுதினார். செப்டம்பர் 1ம் நாள் “கேரவன்” இதழ் காமராசரைப் பாராட்டி எழுதிய கட்டுரையில், பெரியாரின் பணியினையும் சிறப்பித்திருந்தது!

19.4.1961-ல் உதயமான சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி 6.9.1964 அன்று அஸ்தமனமாகி விட்டது; அதாவது காங்கிரசுடன் இணைந்து விட்டது. பெரியார் திடலில் அந்தோணிப் பிள்ளை ஆகியோர் காமராசரிடம் தங்கள் தமிழ் தேசியக் கட்சியை ஒப்படைக்கும் விழா. மாலையில், கடற்கரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு, இவர்கள் ஊர்வலமாகச் சென்று, அங்கு வரவேற்கப்பட்டார்கள். அதிலிருந்து, 1967 வரை சம்பத், காங்கிரசின் மிகப்பெரிய பிரச்சார பீரங்கியாக முழங்கி வந்தார்; ஒரு நாள் கூட ஓய்வின்றிச் சுற்றுப் பயணம் செய்தார். த.தே.க, காங்கிரசுடன் இணைந்த செய்தி “விடுதலை”யில் விளம்பரமாக வெளியிடப்பட்டது. அந்த ஆண்டு “விடுதலை” பெரியார் 86-வது பிறந்த நாள் மலர், 200 பக்கங்களுடன், ஒரு ரூபாய் விலையில், சிறப்பாகக் கொணரப்பட்டது. 10.9.64 அன்று கேரளாவில், தாழ்த்தப்பட்டவரும் காங்கிரஸ் முதலமைச்சருமான சங்கர் கவிழ்க்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

17.9.64 தந்தை பெரியார், 86-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாள், திருச்சியிலுள்ள பெரியார் பயிற்சிக் கல்லூரிகளின் நிறுவனர் நாளில் பெரியாருடன் 1,000பேர் விருந்துண்டனர்; சம்பத், வீரமணி சொற்பொழிவாற்றினர். திருச்சியில் கல்லூரி ஒன்றை நிறுவிட, 5 லட்சம் ரூபாய் வழங்கியருளினார் வள்ளல் ஈ.வெ.ரா. பெரியார். வழக்கம் போலப் பிறந்த நாள் செய்தியும் ஈந்திடத் தவறினாரல்லர்: “நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து, 86-வது ஆண்டில் புகுகிறேன். என்ன செய்து விட்டாய்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில், நீங்களே தான் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, கழிப்பிணித்தன்மை