பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


செய்தார். திருவாரூர் நகர்மன்ற வரவேற்ப்பு, தலைவர் கே.டி.ஆர் கோபால கிருஷ்ண ராஜுவால் வழங்கப்பெற்றது. விழாக்கோலம் பூண்டிருந்த ஆரூரில், சிவாஜி கணேசன். கோபாலசாமி தென் கொண்டார். கவிஞர் கண்ணதாசன் கலந்து கொண்டனர். பெரியார் காவியம் பாடுவதாகக் கண்ணதாசன் அறிவித்தார் (இன்னும் பாடியதாகத் தெரியவில்லை) தஞ்சையில் சீமைக்கறவைப்பச் பெரியாருக்கு அளிக்கப்பட்டது. திருச்சியில் பால்; திருப்பத்தூரில் 2 புதுக்காசு; சேந்தமங்கலத்தில் சவ்வரிசி ஆகியவை துலாபாரத்தில் தரப்பட்டவை. வ.ஆ. திருப்பத்தூரில் நகராட்சித் தலைவர் தி.மு.கழக சின்னராஜு வரவேற்பளித்தார். “விடுதலை”யில் 25.12.64 1¼ பக்க அளவில் பெரியார்,“நாட்டின் பெருங்கேடு பார்ப்பனர் - வர்த்தகர். வக்கீல்” என்பதாக விளக்கங்களுடன் தலையங்கம் எழுதினார்.

1954 டிசம்பர் 25-ஆம் நாள், கிறிஸ்துமஸ் தினத்தன்று வீசிய கடும்புயலால், தனுஷ்கோடி கடற்கரை சேதமுற்றது. பெரியார் - மணியம்மையார், சிதம்பரம், ரெங்கம்மாள் சிதம்பரம் ஆகியோருடன் -29ந் தேதி பாம்பன் பகுதியில் படகில் சென்றார். அங்கு மீட்புப் பணிகைளப் பார்வையிட அமைச்சர் ராமய்யா வந்திருந்தார். மூன்றாண்டுகளாக அமைச்சராயிருந்த அவரைப், பெரியாருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது, மன்னிக்கணும். நான் இதுவரை அய்யாவைப் பார்த்ததில்லை. என்றார் பெரியார்! குற்ற உணர்வுடன் தலை குனிந்தார் ராமய்யா!

நாகை வழக்கறிஞரும், கழகப் பெரியவருமான டி.கே. விசயராகவலு, 28.12.64 அன்று இயற்கை எய்தினார்.

1965-ஆம் ஆண்டின் முதல் திங்கள் பெரியாருக்குத் துலாபார மாதமாகவே அமைந்ததோ? ஜனவரியில் இடைவெளியின்றிச் சுற்றுப் பயணம் செய்த பெரியாருக்குக் குளித்தலையில் எடைக்கு எடை பெட்ரோல், நக்கசேலத்தில் வெங்காயம், கோவையில் வெல்லம், சிதம்பரத்தில் காப்பிக் கொட்டை; பண்ணுருட்டியில் பிஸ்கட், அரகண்டநல்லூரில் மணிலா எண்ணெய், குடியாத்தத்தில் கைத்தறி நூல் நிறுத்து வழங்கப்பட்டன. எந்தப் பெரியாருக்கு அளிக்கப்படும் ஒரு சிறிய பொருளும் வீணாகாமல் நலிந்த மக்களுக்கு, நல்லமுறையில் பயன்படும், என்று நம்பி மக்கள் வழங்குகின்றார்களோ, அந்தப் பெரியார், அதற்கேற்பவே தமக்குத் தரப்பட்ட பெட்ஷீட்டுகளைத் தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கலெக்டர் வழியாக அனுப்பி வைத்தார், பொங்கல் பரிசாக! புயல் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க நினைத்துக் கொண்டிருப்பதாகப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அறிவித்ததும், பெரியார் மனமிக மகிழ்ந்து, அவர் படத்துடன் இச்செய்தியை “விடுதலை" முதல் பக்கம் வெளியிடச் செய்தார். தி.மு.க. சார்பில் 3,000 ரூபாயைக் கலைஞர் மு.கருணாநிதி