பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

371


செய்திகளையாவது Pre-censor அரசு செய்ய வேண்டும்“ என்ற கருத்துக்களைப் பெரியார் ”விடுதலை"யில் எழுதினார்.

சேலத்தில் அக்டோபர் 10, 11 தேதிகளில் நடந்த ஊர்வலம்: பொதுக்கூட்டம் ஆகியவற்றில், பெரியார் கலந்து கொண்டார். பி. ரத்தினசாமிப் பிள்ளை , எஸ்.என்.ஏ. அஜீஸ் (தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர்-மிக இளமையில் காலமாகிவிட்டார்) பால தண்டாயுதம், சம்பத், கண்ணதாசன் பங்கேற்றனர். சிவாஜி கணேசன், தான் பெரியாராக நடித்து ஒரு திரைப்படம் எடுக்கப்பபோவதாக அறிவித்தார். (இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை! ) நன்றி கூறும் முகத்தான் பெரியார், “கலையுலகில் மறுமலர்ச்சி உண்டாக்கும் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் ” என்று குறிப்பிட்டார். 15.10.64 அன்று பக்தவத்சலத்தின் 68-வது பிறந்த நாளில் “நாமும் வாழ்த்துகிறோம்” என்று எழுதிற்று “விடுதலை” “சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா இலங்கைச் சிக்கல் தீர்ந்தது. 3 லட்சம் தமிழர்கள் அங்கு குடியுரிமை பெறுவார்கள்; 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்“ என்ற செய்திக்கு முதற் பக்க முக்கியத்துவம் தந்தது ”விடுதலை".

திருவள்ளூரில் பெரியாரின் எடைக்குச் சமமாகக் காய்கறிகள் வழங்கினார்கள். 21.10.64ல் அங்கே பேசும்போது, “நண்பர் அண்ணாதுரையும், கருணாநிதியும் அடுத்தபடியாக நாங்கள்தான் ஆளப்போகிறோம் என்கிறார்களே. அப்படியே ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சாரியார் சொல்படிதானே ஆளுவார்கள்?“ என்று கேட்டார் பெரியார். (பதில் முரண்பாடாகிவிட்டதே 1967ல்) நவம்பர் 15, 16, 17 தேதிகளில் பெரியார் பெங்களூர் சென்று வந்தார். 5, 11.64 முதல் ”விடுதலை“யில் பெரியார் அன்று சொன்னார்” என்ற தலைப்பில் பெரியாரின் கருத்துக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு, இறுதியில் “இதனை ஆட்சி இன்று செய்கிறது" என்று முடியும் வண்ணமாகத் தொடர்ச்சியான பெட்டிச் செய்திகள் அன்றாடம் பிரசுரமாயின. ஆந்திர மாநிலத்திலிருந்து சந்திராரெட்டி, தமிழ்நாடு பிரதம நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 21, 22 ஆகிய இரு நாட்களிலும் திருச்செங்கோடு கே.பரமசிவம் நடத்தும் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பெரியாருக்கு எம்.ஜி.ஆர் கருப்புச்சால்வை போர்த்திப் புகழ்ந்து போற்றினார். டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஏ.சுப்பையா ஆகியோர் முதல் நாளும், மந்தா கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வாணன், ஜி.டி. நாயுடு ஆகியோர் இரண்டாம் நாளும் பங்கேற்றார்கள். திருவாரூரில், டிசம்பர் 1ம் நாள், பெரியார் பிறந்தநாள் விழாவில் துலாபாரம் நடத்தி, அரிசி வழங்கிய போது, பெரியார் அதனைப் பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவுக்கு அளித்திடச்