பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பார்ப்பனரல்லாத தமிழர் உயர்ந்திருப்பதை, இந்தியப் பார்ப்பனர் எத்தனை நாளைக்குப் பொறுத்துக் கொள்ள முடியும்? பூரி சங்கராச் சாரியார் மற்ற சங்கராச்சாரியார்களைவிட முரடர். அரசியல்வாதிகளுக்கு உண்டான அழுத்தம் உள்ளவர். முன்பு பத்திரிகையாசிரியராக இருந்திருக்கிறார். உணவுக்காகப் பசுக்களைக் கொல்வது பாவம்; இந்து தர்மத்துக்கு விரோதம்; பசுவதையைச் சட்டப்படித் தடுக்க முழுமையான ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என்ற சாக்குச் சொல்லித், தான் உண்ணாவிரதம் தொடங்குவதாக விளம்பரம் செய்தார். காந்தியாருடைய உண்ணாவிரதத்தையே சண்டித்தனம்; வெற்றியளிக்காத சாதனம் என்றெல்லாம் கண்டித்த பெரியார், பூரிசங்கராச்சாரியாரை விடுவாரா?

"பசுவைக் கொல்வது மாத்திரம் கூடாதது என்பதற்கு என்ன அவசியம் என்பது நமக்குப் புரியவில்லை . பால் கறக்கும் பெண் மாடு நல்ல நிலையில் இருந்தால், அந்தப் பசுவை யாரும் கொல்லுவதில்லை. வேலைக்கு லாயக்காக இருக்கும் ஆண் மாட்டையேகூட நம் நாட்டில் யாரும் கொல்வதில்லை.

இது எப்படியோ இருந்தாலும், உலகில் பொதுவாக 100க்கு 95 மக்களுக்குப் பசு ஒரு ஆகாரப் பண்டமாய் இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 46 கோடி மக்களில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் 10 கோடி போக, ஆதித் திராவிட மக்கள் சுமார் 6 கோடி போக, மீதி உள்ள 30 கோடி மக்கள் மாத்திரமே பசு மாமிசம் சாப்பிடாதவர்களாக இருக்கலாம். எனவே, இந்தியாவில் மூன்றில் ஒரு பாகம், அதாவது 100க்கு 33 மக்களுக்கு ஆகாரமாய், உணவாய் இருக்கும் ஒரு ஜீவனைக் கொல்லக் கூடாது என்றால், இதில் ஆணவம் தவிரக் கூடாது என்பதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? உலகில் உண்மையாய் மாமிசம் சாப்பிடாதவர்கள் - 300 கோடியில் சுமார் 20 லட்சம் பேர் கூட இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக, இவர்கள் மனம் புண்படும் என்பதற்காக, அல்லது இவர்களது மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்பதற்காக, யாரும் மாட்டைக் கொல்லக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும் என்று ஒருவர் உண்ணா விரதம் இருந்தால், அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்துத்தான் காப்பாற்ற வேண்டும்!

நான் எனது 25 வயதிலிருந்தே மாட்டு மாமிசம் சாப்பிட்டு இருக்கிறேன். பல தடவை, மாட்டு மாமிசம் சாப்பிட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, எழுதியிருக்கிறேன். இன்றைய நிலைமையில் ஏழைகள் மாமிசம் சாப்பிட வேண்டுமானால், மாட்டு மாமிசந்தான் மலிவாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது. மாட்டு மாமிசத்தில், நாம் சாப்பிடும் மற்ற மாமிசத்தைவிட உணவுச் சத்து அதிகமாக இருக்கிறது. மேலும், பன்றி, கோழி, மீன், பறவைகளைப்