பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

403


அடைய முடியாது என்பதோடு, அதிகக் காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆனால், சண்டித் தொல்லையாகவே கருதுகிறேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும், தொல்லைக்கு ஆளாவது சகஜம்தான்!

எனது அருமைத் தோழர்களுக்கு - தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனையின்றி ஆதரித்து, காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பதுதான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும். தேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக் கொண்டு, போர்முனைக்குச் செல்லும் போர்வீரன் போல், தாய் தந்தை மனைவி மக்களிடம் பயணம் சொல்லிக் கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும்..."

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆணவம் மிகுந்து விட்டது. இந்தத் தடவை அது ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால்தான் அது வழிக்கு வரும் என்ற பரவலான கருத்தும் தமிழகத்து மக்களின் உள்ளத்தின் அடித்தளத்தில் முளைவிடத் தொடங்கியது. இராயபுரத்திலுள்ள ஐந்தாறு சிறுவர்கள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்றே பெரியார் நம்பிக் கொண்டிருந்தார். பெரியாரின் எதிர்ப்பு, யானை தன் மத்தகத்தால் குட்டிகளை மோதியே, தாக்குதலுக்குப் பழக்குவதுபோல், எத்தகைய எதிர்ப்புகளையும் தாங்கச் செய்வதற்கான வல்லமையைத் தமக்குத் தருகின்ற பயிற்சி என்று அண்ணா கருதி வந்தார். அதனால், அண்ணா மிகுந்த ராஜதந்திரத்துடன், காங்கிரசுக்கு எதிர்ப்பான கட்சிகளை ஓரணிக்குள் கொண்டு வந்தார். கூட்டணி என்று அமைக்காமலே, தொகுதி உடன்பாடு முறையைப் புகுத்தி, வெற்றிகரமான உடன்பாடுகளை மற்றக் கட்சிகளுடன் அண்ணா செய்து கொண்டார். எறும்பையும் மூட்டைப்பூச்சியையும் நசுக்குவது போல் அழித்து விடுவேன் என்று முன்பு மிரட்டிய ராஜாஜியே தன்னை ஆதரிக்குமாறு செய்து விட்டார் அண்ணா. நம்முடைய கட்டை விரலை வெட்டுவதாகச் சொன்ன காமராசர், தமிழ் நாட்டு அரசியலை விட்டு விலகி டெல்லி அரசியலில் கலந்துவிட்டார். அதனால் தமிழகத்து நிலவரம் புரியாமல், “நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்“ என்று சபதம் போட்டுவிட்டார். “ஆகட்டும் பார்க்கலாம்” என அண்ணா முனைந்து பணியாற்றினார். பெரியாரை எந்த மேடையிலும் தாக்குவதே கிடையாது!

பெரியாரால் பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்ட காமராசர், அகில இந்திய அரசியலில் இணையற்ற செல்வாக்குப் படைத்தவராக வினங்கினார். நேரு காலத்தில் கிடைத்த காங்கிரஸ் தலைமைப் பதவி, சாஸ்திரி காலத்தில் தொடர்ந்து, இந்திரா காலத்திலும் நீடித்தது. பிரதமர்களையே உருவாக்கும் மகா வல்லமை படைத்தவராக ஒரு