பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

458

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


விலையைப் பார்த்தால், பெரியார் வாங்கித் தருவாரோ என்ற சந்தேகம் என்னுள் எழுந்ததால், 4, 5 தடவை புக் ஸ்டாலுக்குப் போய்க், கொஞ்சம் கொஞ்சமாக, அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஒரு நாள் அந்தப் புத்தகத்தின் சிறப்பு பற்றிப் பெரியாரிடம் குறிப்பிட்டு, அதை வாங்கச் சொன்னேன். நீங்கள்தான் படித்து விட்டீர்களே, இனி எதற்காக அது? என்று மறுத்துவிட்டார் பெரியார்,

ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியின் பொறுப்பாளராக இருந்த பெரியார், 3,000 ரூபாய் மிச்சப்படுத்திவிட்டுத்தாள், பொறுப்பைத் திரு சிக்கையா நாயக்கரிடம் ஒப்படைத்து, வந்தார்.” என்றார். குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்குக் கடவுளரே வழி காட்டி என நகைச்சுவையோடு குறிப்பிட்ட அண்ணா , “சிவனாருக்குப் பிள்ளைகள் இரண்டுதான். அதில் ஒருவருக்குத் திருமணமே ஆகவில்லை, இன்னொருவருக்கு மனைவி இரண்டானாலும் பிள்ளை இல்லை ” என்றார். பத்திரிகையாளரிடம் பேசும் போது, “பள்ளிகளில் தமிழும் இங்கிலீஷும் கட்டாயப் பாடங்கள். மத்திய அரசு, இந்தியையும் போதிக்க வேண்டும் என்று எங்களை நிர்ப்பந்தம் செய்தால், பதவியிலிருந்து விலகி, அதை எதிர்த்துப் போராடுவோம்” என்றார் முதலமைச்சர் அண்ணா .

கழகப் பிரச்சாரத்திற்காகவும், சிங்கை-மலேசிய நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாலும், 25.12.67 அன்று பிற்பகல் 3.30க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட வீரமணி குடும்பத்தினர், இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்தபோது, “தமிழ் முரசு” தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களும், தோழர்களும் வரவேற்று, உபசரித்தனர். மறுநாள் காலை 11 மணிக்கு சிங்கப்பூரை விட்டு விமானத்தில் புறப்பட்டுப் பிற்பகல் 11 மணிக்கு, ஈப்போ விமான நிலையம் சென்றடைந்தனர். அங்கே மர்க்கண்டைல் பிரஸ் உரிமையாளரான வீரமணியின் மைத்துனர் சந்திரனின் குடும்பத்தார், மற்றும் தமிழ்ப் பெரு மக்கள் திரண்டிருந்து வரவேற்றனர். ஒரு மாதகாலம் மலேசியாவில் தங்கிய வீரமணி, ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியாரின் கருத்துக்கனல் கமழச் செய்தார்.

2.1.68 அன்று சென்னை மவுண்ட்ரோடு ரவுண்டானாவில் சர் ஏ. ராமசாமி முதலியார், அண்ணா சிலையைத் திறந்து வைத்துத் “திறமை மிக்கவர். தளராமல் உழைத்து முன்னேறியவர் அண்ணா” என்று புகழந்து பாராட்டினார். 11.1.68 அன்று அதிகாலை 3.30 மணிக்குப் பூவாளூர் அ.பொன்னம்பலனார் சென்னைப் பொது மருத்துவமனையில்