பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

477



என்றைய தினம் நான் சுயமரியாதைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டேனோ,அன்றிலிருந்து இன்று வரை, நான் சுயமரியாதைக்காரனாகத்தான் நடந்து வருகிறேன் என்று பேசிவிட்டு அண்ணா அவர்கள், பெரியார் தனக்குப் போர்த்திய பொன்னாடையை, அரூர் முத்துவிடம் 500 ரூபாய்க்குத் தந்து, அந்தத் தொகையைப் பெரியாரிடம் கார் நிதிக்காக வழங்கினார், அதே மேடையில்!

சென்னை மாநில சுயாட்சிக் கருத்தரங்கு 20.7.68ல் நடைபெற்றது. -அண்ணா பங்கு கொண்டு, “மத்திய அரசின் கையில் அநாவசியமான, தேவையற்ற ஏராளமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. பாதுகாப்பு, போக்குவரத்து, நாணயச் செலாவணி தவிர மற்றவற்றை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும்!“ என்றார். பெரியாரின் “நகரும் குடில்” நிதிக்காக 24.7.68 வரை, ரூ. 17,140.01 சேர்ந்துள்ளதாக, வீரமணி அறிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிகப் பிரதம நீதிபதியாக கே. வீராசாமி 26.7.68 முதல் நியமிக்கப்பட்டது, பெரியாருக்கு ஓரளவு ஆறுதலளித்த செய்தியாகும்.

20.7.68 முக்கிய தலையங்கம் பெரியாரால் வரையப்பட்டது. “மத்திய ஆட்சி ஜார் (Czar) ஆட்சியே!” என்பது தலைப்பு. “ரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சியை லெனின் மலரச் செய்வதற்கு முன்பு இருந்தது போல், இந்தியாவிலும் இப்போது மத்திய ஆட்சி செயல்படத் துவக்கியுள்ளது. இம் என்றால் சிறைவாசம். அம் என்றால் வனவாசமாம். நமது இயக்கத்தை, திராவிடர் கழகத்தைச் சட்ட விரோதமாக்க மத்திய அரசு கத்தி தீட்டுகிறதாம்! நம்மைக் கைது செய்து, சிறையில் நீண்டகாலம் அடைக்கவும் திட்டம் தயாராகிறதாம். தோழர்களே தயாராகுங்கள்“ என்று வீரமுரசு ஒலித்தது. துணைத் தலையங்கமோ ‘கடவுளர்பட நீக்கமும் பூணூல்களின் கொதிப்பும்’ என்பதுபற்றி. பெரியாரும், இது சம்பந்தமாய்த் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து, “இந்த ஆணை பிறப்பித்தது மிகவும் நல்லது. இதே காரணத்தால் அலுவலகங்களிலுள்ள திருவள்ளுவர், காந்தியார் படங்களையும் அகற்றி விடலாம். பட்டாளத்தில் உள்ள ஒழுங்கு முறைபோல் அரசு ஊழியர்களும் பூணூல், நெற்றிக் குறிகளை நீக்க வேண்டுமென உத்தரவிடலாம்,” என்று எழுதினார்.

“அலுவலகங்களில் சாமி படம் வைத்தது யார்? கீழ்த்தரச் சிப்பந்தி தானே? செத்துப்போன ‘சுதேசமித்திரன்’ இதை வைத்து, நடமாடப் பார்க்கிறது. மாண்புகள் அறிஞர் ஒன்று சொல்லுகிறார். நாவலர் ஒன்று சொல்லுகிறார். ஞாபக மறதியா, பார்ப்பனப்புரட்டா? என்று பெட்டிச் செய்தி ஒன்று 23.7.68 அன்று பெரியாரால் வெளியிடப்பெற்றது. இதற்குக் காரணங்கள்- “சுதேசமித்திரன்" ஏடு, கடவுளர் பட நீக்கத்துக்கு ஒரேயடியாகக் கூக்குரலிட்டு, எதிர்த்தது ஒன்று: அண்ணா இந்தச் சுற்றறிக்கையில் கையெழுத்திடவில்லை என