பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நாவலர் கூறிய செய்தி ரெண்டு பார்ப்பான் சொன்னால் தமிழனுக்குப் புத்தி எங்கே போச்சுது? Secular என்ற வார்த்தை, இங்கிலீஷ் வார்த்தை, இதற்கு இங்கிலீஷ்காரன் சொல்லுகிற அர்த்தம்தானே சரியானது? மதச்சார்பற்ற என்றால் எல்லா மதத்தையும் அனுமதிப்பது என்றா பொருள்? தமிழர்களே முதலில் நீங்கள் உங்கள் வீடுகளிலுள்ள கடவுளர் படங்களையாவது எடுத்து எறிந்து விடுங்கள்" என்று 29-ந் தேதியில் பெரியார் எழுதினார். அண்ணாவிற்கு உடல் நலங்குன்றியதால் 30ந் தேதி, சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஆகஸ்டு முதல் வாரம் முழுவதும் பெரியாரின் எழுத்துகள் “விடுதலை" க்கு விறுவிறுப்புத் தந்தன. “பார்ப்பனர் (ஆரியர்) சுத்தக் காட்டுமிராண்டிகள். பார்ப்பனக் கடவுளரின் ஆபாசமான, கீழ்த்தரமான நடவடிக்கைகளை விளக்கும் வடமொழி நூல்களிலுள்ள விஷயங்களை நாம் அப்படியே மொழி பெயர்த்துத் தந்தாலே போதும்; இவர்கள் வண்டவாளம் விளங்கி விடும். அதற்காக என்றே ஒரு பத்திரிகை துவக்க இருக்கிறேன். எழுதுவதற்குத் தமிழறிஞர்களைப் பணி புரியுமாறு அழைக்கிறேன். இன்றையக் கடவுள் படப் பிரச்சினை நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. படத்தைச் சுவரில் தொங்க விடுவது, அவனவன் சொந்த பக்திக்காகவா, இல்லை பிரச்சாரத்துக்காகவா என்பதைக் கேளுங்கள். பார்ப்பனர்கள் இதை எதிர்க்கத் துவங்கியதே, நமக்கு நல்லதாயிற்று! ஆச்சாரியாரையே கேட்போம்; பதில் கூறுவாரா? ஒரு பெண் கன்னி என்றால், ஆண் சம்பந்தமே இல்லாதவள் என்பதல்ல; எல்லா ஆண்களையும் சமமாகப் பாவித்துக் கூப்பிட்ட வனோடெல்லாம் போகிறவள்தான், என்று அர்த்தம் சொல்வது போல், செக்குலார் ஸ்டேட்டுக்கும் அர்த்தம் சொல்கிறார்களே!

முதல் அமைச்சரும் கல்வி அமைச்சரும் பதவி போய் விடுமோ? நாம் கொல்லப்பட்டு விடுவோமோ? என்கிற பயமில்லாமல் துணிவுடன் செய்ய வேண்டும். பகுத்தறிவாளர் ஆட்சியில் தானே இம்மாதிரிக் காரியங்கள் நடைபெற முடியும்? பாரதிதாசன் கவிதைகள் பாடங்களில் நிறைய இடம் பெறுமாறு, கல்வி இலாக்காவைச் சீர்திருத்த வேண்டும், எனக்கப்புறம் இந்த விஷயங்களைச் சொல்லவும் ஆளில்லை . தி.மு.க.வுக்கு அப்புறம், இதைச் செய்யவும் ஆட்சியில்லை . அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்களை அவர்களாகவே அகற்றி விடாவிட்டால், நானும் எனது தோழர்களுமே, புகுந்து நீக்குவோம்.

அதேபோல் தெருவோரம், அலுவலக வளைவு இங்கெல்லாம் பார்ப்பான் ஆதரவுடன் கோயில்கள் முளைக்கின்றன. தமிழர்கள் கோர்ட்டுக்குச் சென்றாவது இவற்றைத் தடுக்க வேண்டும்." (திருவரங்கத்தில் 4.8.68 அன்று இம்மாதிரி. ஒரு தடையுத்தரவைத்