பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

514

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தொகுப்பு. அடுத்த வாரம், Pen Portrait பகுதியில், படத்துடன் விளக்கம். பெரியார் சாதி ஒழிப்பில் காந்தியாரையும் விஞ்சியவர். இருண்ட தமிழகத்தில் பகுத்தறிவு ஒளிபரப்பிய மாமேதை, நாத்திகக் கோட்பாட்டில் Bertrand Russel in England and Alfaro Sequicros in Mexico ஆகியோரை ஒத்தவர் என்றெல்லாம் ஏராளமாகப் புகழ்ந்து, போற்றிப் பாராட்டியிருந்தது!

காரைக்குடி குறள் விழாவில் பேசிய அமைச்சர் மா முத்துசாமி, 'குறளிலும் குற்றம் உள்ளதென்று தம் மனத்திற்பட்ட உண்மையை, மறக்காமல் துணிந்து கூறக் கூடியவர், பெரியார் ஒருவரே!' என்றார். 1.7.79 அன்று திருச்சியில் மதுரம் விளையாட்டரங்கில், கலப்பு மணத் தம்பதியர் 8 ஜோடிகளுக்கு அரசு தங்கப்பதக்கம் வழங்கும் விழா பெரியார் ரதத்திலும், தம்பதிகள் ஜீப்பிலும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பெரியார் தலைமையில் முதல்வர் கலைஞர் பதக்கம் வழங்கினார். சமுதாய சீர்திருத்தத் தொண்டர்களுக்குக் கடவுள் மத சாஸ்திர நம்பிக்கை இருக்கக் கூடாது என்று பெரியார் கூறினார்.

15.7.69 காமராஜரின் 67வது பிறந்தநாள். வழக்கம் போலல்லாமல், "விடுதலை" சிறிய அளவில் வாழ்த்துச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. தலையங்கப் பகுதியில் பெரியார், “தி.மு.க.வுக்குச் சோதனைக் காலம்" என்று எழுதினார். பொதுச் செயலாளர் தேர்தலில் கலைஞர், நாவலர் இருவருமே போட்டியிடப் போவதாக வந்த செய்தி கேட்டு வருந்தினார். கட்சித் தலைவர் ஒருவராகவும், முதல்வர் வேறு ஒருவராகவும் இருப்பதும் தவறுதான் என்றார். தஞ்சை மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு Tractor உபயோகிக்கக் கூடாது என்று இடது கம்யூனிஸ்டுகள் போராடிய போது, இது பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள கட்சி, இது அவர்கள் சூழ்ச்சிதான் என்று எழுதினார் பெரியார். ராஷ்டிரபதி தேர்தலை யொட்டி, டெல்லியில் சிக்கல்கள் எழுந்தள. அதிகார பூர்வமான வேட்பாளர் சஞ்சீவரெட்டியைக் காமராஜரும், நிஜலிங்கப்பாவும் ஆதரித்தனர். இந்திராகாந்தி, வி.வி. கிரியைத் தூண்டிவிட்டு, நிற்கச் சொல்லி, ஜகஜீவன்ராம் ஆதரவைத் தேடிக் கொண்டார். இதிலிருந்து, இந்திய அரசியலிலும் ஆரிய திராவிட உணர்ச்சிப் போராட்டம் முகமூடியைக் கிழித்து வெளிவந்து விட்டது" என்றார் பெரியார்-"வகுப்பு வாதம் டில்லிக்கு எட்டி விட்டது" என்னுந் தலைப்பில்

காமராஜரின் பிறந்த நாள் விழா சென்னை பாலர் அரங்கில் மாணவர்களால் 18.7.69 அன்று நடத்தப்பட்டது. கலைஞரது பிறந்தநாள் விழாவில் காமராஜர் கலந்து கொள்ள மறுத்தபோதிலும், கலைஞர் இந்த விழாவில் பங்கேற்றார். சி.சுப்ரமணியம், சம்பத், ஹண்டே, என்.வி. நடராசன், சிவாஜி கலந்து கொண்டனர். பெரியார் சார்பில் வீரமணி, பெரியார் வேலூர் மருத்துவமனையிலிருந்து தந்த செய்தியை