பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

513


கருணாநிதி அவர்களது 45-ம் ஆண்டு கழிந்து. 46-ம் ஆண்டுத் தோற்றத்தை, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்" என்று வாழ்த்துக் கூறினார். ஆனால் 2ந் தேதியே பெரியார் சென்னைப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஒரிருவாரம் தங்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தும், 7, 8 தேதிகளில் தஞ்சை, திருத்தணி, அரக்கோணம் இங்கெல்லாம் சென்று, மீண்டும் மருத்துவமனை சேர்ந்து, 15 சென்னையிலும் 21 திருச்சியிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். எனினும் 25ந் தேதி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் டாக்டர்கள் பட், கோஷி, ஜான்சன் ஆகியோர் சிகிச்சை தர, அங்கே தங்கினார். மணியம்மையார், ஆம்பூர் பெருமாள், ஏ.டி. கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

16.6.69 அன்று பெரியார் “இலண்டனில் அண்ணா ஆட்சி" என்று குறிப்பிட்டு, மகிழ்ச்சியோடு ஒரு தலையங்கம் “விடுதலை” யில் தீட்டியிருந்தார். 'கூடி வாழ இஷ்டமில்லை , என்று தம்பதிகளில் ஒருவர் வாயினால் கூறினார். போதும்! மணவிலக்குத் தந்துவிடலாம்' என்று காமன்ஸ் சபையில் இங்கிலாந்து ஒரு Divorce சட்டத்தை 14.6.69 அன்று நிறைவேற்றியது. “இது அண்ணாவின் சுயமரியாதைத் திருமணச் சட்டம் போலப் புரட்சிகரமானது, இதைப் பெரிதும் வரவேற்கிறேன்" என்றெழுதினார் பெரியார்.

மாநில சுயாட்சிப் பிரச்னைபற்றி ஆராய நீதிபதிகள் பி.வி. ராஜமன்னார், சந்திராரெட்டி, மற்றும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் ஆகிய மூவர் கொண்ட குழுவைத் தமிழக அரசு நியமித்தது. கீழத் தஞ்சை விவசாயக் கூலி நிர்ணயம் செய்ய கணபதியா பிள்ளை கமிஷனையும் நியமித்தது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக பி.ஆர், கோகுல கிருஷ்ணன், ஜி.இராமானுஜம் நியமிக்கப்பட்டதை அடுத்து, கோவிந்த சுவாமிநாதன் அட்வகேட் ஜெனரல். வி.இராமசாமி பப்ளிக் பிராசிக்யூட்டர், எஸ். மோகன் கவர்ன்மெண்ட் ப்ளீடர்-நியமனம் பெற்றனர் 10.7.69 அன்று. சென்னைக் கடற்கரையில், கலைஞர் பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டத்தில், இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளன்று தமிழகம் எங்கணும் 60 ஊர்களில் அண்ணா சிலை நிறுவப்படும் எனக் கலைஞர் அறிவித்தார்.

Shankar's Weekly ஜூன் 1-ந் தேதி 8-ந் தேதி இரண்டு இதழ்களில், பெரியாருக்கு மிகுந்த மரியாதை செலுத்தியிருந்தது. முதல் இதழில் 4 வித போஸ்களில் தர்மபுரி பெரியார் சிலை. அடியில் கடவுள் மறுப்பு வாசகங்கள், ராஜாஜி திகைப்போடும், வெறுப்போடும், அச்சத்தோடும் முதல் மூன்று படங்களில்/ கடைசிப் படத்தில் கைத்தடி கிடக்க, ஆள் மறைந்துபோயிருக்கிறார். Quo Vadis? என்ற தலைப்பில் இந்த கார்ட்டூன்